தமிழகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவிலும் சிறந்த தொழிலதிபராக அறியப்படுபவர் சரவணா ஸ்டோர் அருள் சரவணன் அண்ணாச்சி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து அசத்தினார். மக்களின் மத்தியிலும் நல்ல கவனத்தை பெற்றார்.
தொடர்ந்து லெஜண்ட் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தில் சில மோசமான விமர்சனங்கள் எழுந்த போதிலும் அதை பற்றி எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இப்போது லீடர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடித்த கொடி நடிகர் சூரி நடித்த கருடன் போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். லீடர் படத்தில் அவரது இயக்கம் பழக்கவழக்கம் உள்ளிட்டவைகளை கவனித்த லெஜண்ட் அண்ணாச்சி, அவருக்கு தனது 3வது படத்தையும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 9ம் தேதி லீடர் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் அப்பா மகள் உறவை மையப்படுத்திய கேரக்டரில் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லீடர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் நடந்த லீடர் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் லெஜண்ட் அண்ணாச்சி கூறியதாவது, என்னுடைய பேவரைட் டைரக்டர் என்றால் அவர் நெல்சன் தான். ஆனால் அவரை இப்போது பிடிக்க முடியாது போலிருக்கிறது. இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு அவரை யாருமே பிடிக்க முடியாது போலிருக்கிறது. அவ்வளவு உச்சத்தில் போய்விட்டார் அவர்.
அவரது பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால் பாஸ், உங்கள் படத்தில் ஏதாவது கேமியோ ரோல் இருந்தால் சொல்லுங்க. ஒரு பஃயரா ரெண்டு நாள் மூணு நாள் ஷூட்டிங் இருக்கிற மாதிரி. கண்டிப்பா பண்ணிடலாம் என்று நடிகர் லெஜண்ட் அருள் சரவணன் அந்த நிகழ்ச்சியில் மேடையில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





