அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ட்விட்டர் பிலிண்டெர் என்ற நிறுவனம் 2023 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தென்னிந்திய படங்களில் ட்விட்டரில் அதிகம் விவாதிக்கப்பட்ட படத்தின் விவரங்களையும், இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட விடயங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்னிந்தியாவில் அதிகம் பேசப்பட்ட படங்களில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நாலாவது இடத்தையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வெளியாக காத்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் ஆறாவது இடத்தையும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது.
Tamil, Telugu movie fans.. You lit up the Twitter timeline this year…🔥
These South Indian movies were tweeted about the most…👀 @TweetBlinder pic.twitter.com/Igzapx6TG6— Tweet Blinder (@TweetBlinder) July 25, 2023
அதிகம் பேசப்பட்ட விடயங்களில் ஐபிஎல் 2023 என்ற ஹாஸ் டேக் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக எம்எஸ் தோனி என்ற என்ற ஹாஸ் டேக் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிபுருஷ் திரைப்படமும் நான்காவது இடத்தில் விசில் போடும் உள்ளது. இந்த வரிசையில் லியோ ஆறாவது இடம் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் இடம்பிடித்து உள்ள ஒரே தமிழ் திரைப்படம் லியோ மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Here we go…
Most Tweeted Hashtags in Sports 👀 @TweetBlinder pic.twitter.com/ihdGkENGH5— Tweet Blinder (@TweetBlinder) July 24, 2023
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இந்திய அளவில் மிகவும் பிரபலம் பெற்று வருகிறது என்பதை டிவிட்டர் பிலிண்டெர் அறிக்கையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் பலரும் எதிர்பார்க்கும் ஆயிரம் கோடி என்ற மைல் கல்லை லியோ திரைப்படம் எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது என்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் விரைவில் இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது. படப்பிடிப்பு முடிவை தொடர்ந்து விஜய் தற்போது ஓய்விற்காக வெளிநாடு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





