மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய படங்களை தந்து இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நட்சத்திர இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறினார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியானது.
இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராம்சரண் இந்தி நடிகர் அமீர்கான் பான் இந்திய நடிகர் என அழைக்கப்படும் பிரபாஸ் போன்ற மாஸ் ஹீரோக்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று நேர்காணல்களில் கூறி வந்தனர். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
கூலி படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களால் ரஜினி – கமல் இணைந்து நடிக்க வேண்டிய அடுத்த படத்தையே லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கமல்ஹாசன் தான், நடிகர் ரஜினிகாந்தை நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம், நல்ல ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்கள் என்று கூறிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒரு அலுவலகத்தில் இப்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது உதவி இயக்குனர் குழுவினர் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில்தான் கூலி படத்தின் டிஸ்கசனும் நடத்தப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. இதற்கிடையே கூலி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த இந்தி நடிகர் அமீர்கான் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ ஆக்சன் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் அந்த படம் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.
ஏனென்றால் கூலி படத்தில் அமீர்கான் நடித்திருந்த கேரக்டரை பார்த்து கோமாளித்தனமாக உள்ளது என்று பாலிவுட் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். அதேபோல் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்த வில்லன் கேரக்டரும் தத்தி போல காட்டியிருப்பதாக தெலுங்கு ரசிகர்களிடம் விமர்சனம் எழுந்தது. இதனால் நடிகர் நாகார்ஜுனாவும் லோகேஷ் கனகராஜ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுவரை 98 படங்களில் நடித்துள்ள நாகார்ஜூனா ஒரு படத்தில் கூட வில்லனாக நடித்ததில்லை. ஆனால் நடிகர் ரஜினிக்காக கூலி படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனால் அவரது கேரக்டரை சரியான விதத்தில் உருவாக்காமல் இயக்குனர் லோகேஷ் கோட்டை விட்டுவிட்டார். மேலும் ராம்சரண் பிரபாஸ் அமீர்கான் போன்றவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆரம்பத்தில் நடிக்க ஆசைப்பட்ட நிலையில், கூலிக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் லோகேஷ் பெயரை சொன்னாலே வேண்டவே வேண்டாம் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.





