- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ திரைப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு?... ஜெயிலர் திரைப்பட வசூலை முந்தியதா?... முழு விவரம் இதோ...

லியோ திரைப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு?… ஜெயிலர் திரைப்பட வசூலை முந்தியதா?… முழு விவரம் இதோ…

- Advertisement -

இந்த ஆண்டு தொடக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. இதன் மூலம் முதல்முறையாக தெலுங்கு படத்தில் நேரடியாக அவர் நடித்திருந்தார். ரஷ்மிகா மந்தனா சரத்குமார் ஷியாம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த அந்த திரைப்படம், சுமாரான விமர்சனத்தையே பெற்றது. அந்த சமயத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற, நாட்கள் செல்ல செல்ல வாரிசும் வசூலை குவிக்க ஆரம்பித்தது.

குடும்ப பங்கான கதையாக அது எடுக்கப்பட்டதால், பலர் வாரிசு திரைப்படத்தை காணச் சென்றனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்தார் விஜய். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் ஜோடி சேர்ந்ததால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அது மட்டும் அல்லாமல், எல் சி யு கான்செப்ட்டை விக்ரம் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியிருந்த லோகேஷ் கனகராஜ், அதில் வெற்றியும் பெற்றதால் இதுவும் நிச்சயமாக அந்த கான்செப்ட்டில்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

இப்படியான சூழலில் பிப்ரவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. அப்போதே படத்திற்கு லியோ என பெயிரிடப்பட்டுள்ளதாகவும், இந்தத் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. படத்தில் விஜய்யுடன் திரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மேத்யூ என ஏராளமானோர் நடித்தனர்.

மிகப் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. முதல் பாதி நன்றாக இருந்ததாக கூறிய ரசிகர்கள், இரண்டாம் பாதியில் அதனை லோகேஷ் கனகராஜ் கோட்டை விட்டதாக கருத்து தெரிவித்தனர். இதனை இயக்குனரும் ஒத்துக் கொண்டார். இரண்டாம் பாகத்தில் வரும் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி கற்பனைதான் என்று கூறியும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் லியோ படத்தின் விமர்சனம் அதன் வசூலை பாதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆயுத பூஜை விடுமுறை என்பதால் படத்திற்கு ஏராளமான கூட ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், லியோ படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் முழுமையான வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது லியோ திரைப்படம், ஒட்டுமொத்தமாக 623 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். அதேசமயம் ஜெயிலர் திரைப்படம் 607 கோடியே ஈட்டியுள்ள நிலையில், அதனை லியோ முந்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 223 கோடி ரூபாய் அந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் 240 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை அந்த திரைப்படம் புரிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்