- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலரின் சாதனையை ஊதி தள்ளிய லியோ... மீண்டும் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்த விஜய்... அப்போ...

ஜெயிலரின் சாதனையை ஊதி தள்ளிய லியோ… மீண்டும் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்த விஜய்… அப்போ அடுத்த சூப்பர் ஸ்டாரு தளபதிதான் அறிவிக்கலாமா!…

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். அவருக்கு தமிழ்நாட்டை உள்ளதை போல கேரள மாநிலத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் நாளைய தீர்ப்பு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தனது அயராத உழைப்பினால் லியோ வரை வந்து தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார்.

மற்ற நடிகர்களுக்கு அவர்களது திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் அது வசூல் ரீதியாக லாபத்தை ஈட்டுவது என்பது கடினமான விஷயம். ஆனால் இங்கு தளபதி விஜய்க்கு அப்படி அல்ல. அவரது திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றாலும், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் விஜயின் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க விரும்புவதால், அது ஹிட் அடித்து விடுகிறது.

இந்த ஃபார்முலாவை கில்லி திரைப்படத்திலேயே விஜய் கைப்பற்றி விட்டார். இந்த படத்திற்குப் பிறகு அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள், கமர்சியல் கன்டென்ட் ஆகவே இருந்தன. இடையில் சில சறுக்கல்கள் இருந்தாலும், அதை சரியான நேரத்தில் கவனித்து விட்டு மீண்டு வந்தார் தளபதி விஜய்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன. இருப்பினும் வழக்கம்போல இந்த திரைப்படங்கள் வசூலில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், தயாரிப்பாளருக்கு ஓரளவு மனநிறைவை கொடுத்தன.

ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் என்ற அந்தஸ்தை பெறவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் இணைந்து லியோ படத்தை கொடுத்திருக்கிறார் விஜய். மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வியாழன் கிழமை வெளியான இந்த திரைப்படம், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

அதேசமயம் இந்த முறையும் விஜய் திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல விமர்சனத்தை பெறவில்லை. இப்படி இருக்க முதல் நாளில் 148 கோடியை 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதன் பிறகு வசூல் குறித்து வாய் திறக்காமல் இருந்தது. இதன் நடுவே லியோ வசூல் குறைந்து விட்டதாக சினிமா விமர்சனங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இப்படியான சூழலில் தற்போது ஒரு வாரத்திற்கான வசூலை அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், 461 கோடி ரூபாய் லியோ ஈட்டி இருப்பதாகவும், இது தமிழ் சினிமாவிலேயே அதிகபட்ச சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம், ஒரே வாரத்தில் 345 கோடியே 61 லட்சம் ரூபாய் வசூல் செய்திருந்தது. இப்படியான சூழ்நிலையில்தான் ஜெயிலரின் சாதனையை லியோ முறியடித்து இருக்கிறது. இதனைக் கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், இணையத்தில் ரஜினியை கிண்டலடித்து வருகின்றனர். இதனால் ரஜினி ரசிகர்கள் கொதித்தெழ, இணையத்தில் வார்த்தை போர் முற்றியுள்ளது.

சற்று முன்