லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தைதான் ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்திருக்கிறது. ஏனெனில் வரிசையாக ஹிட் கொடுத்துவரும் லோகேஷ் இதையும் ஹிட்டாக கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையும் விஜய் நடித்திருப்பதும்தான் காரணம்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சார் சென்று யு/ஏ சர்ட்டிஃபிகேட்டையும் வாங்கிவிட்டது. இதற்கிடையே செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. சூழல் இப்படி இருக்க படத்திலிருந்து வரிசையாக போஸ்டர்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
மேலும் இன்று மாலை லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரசிகர்கள் காலையிலிருந்தே மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். எப்போதான் மாலை வருமோ என கமெண்ட்ஸையும் பார்க்க முடிகிறது. கண்டிப்பாக ட்ரெய்லரில் படத்தின் கதையை பற்றி ஓரளவு புரிந்துகொள்ளலாம் என்பதால்தான் இந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.
இதற்கிடையே சஞ்சய் தத் மெயின் வில்லன் அவருக்கு துணையாக வருபவர்தான் அர்ஜுன் இவர்கள் கேங் விஜய்யை காலி செய்ய வருவதும் அதை எதிர்த்து போராடுவதும்தான் கதை என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய்க்கு இதில் லியோ தாஸ், பார்த்திபன் என்ற இரண்டு கெட்டப்புகள். இதில் லியோ தாஸ் சஞ்சய் கேங்கில் இருப்பார். பிறகு ஒரு சில காரணங்களால் விலகி தன்னுடைய அடையாளத்தை மறைத்து பார்த்திபன் என்ற கெட்டப்பில் காஷ்மீரில் வாழ்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் த்ரிஷா விஜய்க்கு மனைவியாகவோ இல்லை காதலியாகவோ வரலாம் என்றும் திரைத்துறையில் கூறுகின்றனர். பல வருடங்கள் கழித்து விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக நடித்திருப்பதால் அவர்களை திரையில் பார்ப்பதற்கே ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பதும் உண்மை. இந்நிலையில் லியோ படத்தில் த்ரிஷா லுக்குக்கான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
Unveiling the most-awaited look of @trishtrashers 💥#LeoTrailer is releasing today 💥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SunTV @SonyMusicSouth #Leo#LeoTrailerFromToday pic.twitter.com/oe15rahOw5
— Seven Screen Studio (@7screenstudio) October 5, 2023
அந்த போஸ்டரில் அவர் பயங்கர ஷாக் எஸ்க்ப்ரெஷனில் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள், விஜய் தனது கேங்ஸ்டர் முகத்தை மறைத்து வாழ்ந்து வந்திருப்பார். ஒருகட்டத்தில் அந்த முகத்தை எதிரிகளிடம் காண்பிக்கும்போது த்ரிஷா இப்படி ஷாக்காவார் என்று டீகோட் செய்துவருகிறார்கள். அதுமட்டுமின்றி படத்தில் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் ஏகப்பட்ட சர்ப்ரைஸை கொடுத்து நம்மையும் ஷாக்குக்கு உள்ளாக்குவார் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றார்கள்.





