- Advertisement -
Homeபொழுதுபோக்குமாதவன் நடிப்பில் ஜிடி நாயுடு பயோபிக் படம்; ஷூட்டிங் முடிவு பண்ணியாச்சு, முக்கிய வேடங்களில் நடிக்கும்...

மாதவன் நடிப்பில் ஜிடி நாயுடு பயோபிக் படம்; ஷூட்டிங் முடிவு பண்ணியாச்சு, முக்கிய வேடங்களில் நடிக்கும் 2 பிரபல நாயகிகள் – அட இவரும் இந்த படத்துல நடிக்கிறாரா?

- Advertisement -

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் அறிமுகமான போது சாக்லேட் பாய் என்று டீன் ஏஜ் பெண்களால் அழைக்கப்பட்டார். அவர் நடித்த மின்னலே டும்டும்டும் ரன் அன்பே சிவம் ஆயுத எழுத்து கன்னத்தில் முத்தமிட்டால் ஜே ஜே நளதமயந்தி வேட்டை போன்ற பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

காதல் படங்களிலும், ஆக்சன் படங்களிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் மாதவன் அலைபாயுதே பார்த்தாலே பரவசம் பிரியமான தோழி எதிரி பிரியசகி தம்பி ரெண்டு குரு ஆர்யா எவனோ ஒருவன் வாழ்த்துகள் குரு என்னோட ஆளு யாவரும் நலம் மன்மதன் அம்பு என பல படங்களில் வித்யாசமான கேரக்டரில் நடித்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் கூட மாதவனின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அவர் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு ஆங்கிலம், இந்தி இருமொழி திரைப்படமும் பெரிய அளவில் பாராட்டை பெற்று விருதுகளை குவித்தது. தமிழில் மாறா படம் மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியானது.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை தான், ராக்கெட்ரி நம்பி எபெக்ட் படமாக மாதவன் தந்திருந்தார். இப்போது நடிகர் மாதவன் கோவையை சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் என்று கூறப்படுகிறது. வருகிற 2025ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் ஜிடி நாயுடு பயோபிக் படத்தின் ஷூட்டிங்கை துவங்க உள்ளனர். அதற்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் ஜிடி நாயுடு கேரக்டரில் நடிகர் மாதவன் நடிக்கிறார். மேலும் முக்கிய கேரக்டர்களில் நடிகைகள் அபர்ணா முரளி, பிரியாமணி ஆகியோரும் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு குறிப்பிட்ட கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்