- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி தோனியோட நிலைமை அவ்வளவுதான், நல்லா பிளான் பண்ணி ஏமாத்திட்டாங்க, கொஞ்சமாவது உஷாரா இருந்துருக்கலாம்

இனி தோனியோட நிலைமை அவ்வளவுதான், நல்லா பிளான் பண்ணி ஏமாத்திட்டாங்க, கொஞ்சமாவது உஷாரா இருந்துருக்கலாம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், இந்திய மக்கள் பலருடைய இதயங்களில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவருமான மகேந்திர சிங் தோனி, சென்ற வருடம் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். “இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை” என்று பலரும்  விமர்சித்தார்கள். ஆனால் தோனியின் ரசிகர்களோ வெல்கம் என்று அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

அதிலும் தோனி முதன்முதலில் ஒரு தமிழ்த் திரைப்படத்தைத்தான் தயாரிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்தபோது தமிழ் சினிமா ரசிகர்கள் குஷி ஆனார்கள். அதனை தொடர்ந்து தோனி, நயன்தாராவை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அந்த புராஜெக்ட் ஏனோ நகரவில்லை. அதன் பின் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தோனி, விஜய்யை அணுகினார். ஆனால் விஜய்யோ இப்போதைக்கு தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

- Advertisement -

இந்த முயற்சிகள் எல்லாம் கைக்கூடாத நிலையில்தான் தோனி, ஹரீஷ் கல்யாணை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் டைட்டில், நடிகர்கள் என மற்ற விஷயங்களும் முடிவானது.

அவ்வாறுதான் “LGM” திரைப்படத்தை தயாரித்தார் தோனி. இத்திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக “லவ் டூடே” புகழ் இவானா நடித்திருந்தார். மேலும் நதியா, யோகி பாபு போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

தோனி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருந்தனர். ஆனால் “LGM” திரைப்படம் ரசிகர்களின் பொறுமையைத்தான் சோதித்தது. திரைக்கதையில் மிகப் பெரிய சொதப்பல் நடந்ததால் படம் மொத்தமாக ஃப்ளாப் ஆனது. “தோனி நம்மை வச்சி செஞ்சிட்டாரே” என்று ரசிகர்கள் ஏமாந்துப்போனார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், “LGM” திரைப்படத்தின் தோல்வியை குறித்து பேசியுள்ளார்.

“இவ்வளவு மோசமான படத்தை தோனியிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நினைத்தார் என்றால் எவ்வளவு பெரிய படத்தை வேண்டுமானாலும் உருவாக்கியிருக்கலாம். அவர் முதலில் விஜய்யை வைத்து படம் பண்ணலாம் என்று விஜய்யிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால் விஜய்யால் இப்போதைக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல் இருந்தது. ஆதலால் நடுவில் ஒரு சின்ன படம் பண்ணலாம் என்றும் ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் நினைத்துத்தான் LGM படத்தை உருவாக்கினார்.

ஒரு நாளு பேரிடம் அட்வைஸாவது கேட்டிருக்கலாம். ஒரு புது இயக்குனரை அறிமுகப்படுத்தும்போது அவர் எந்தளவுக்கு சரியாக இருப்பார் என்று யோசித்திருக்கலாம். குறைந்தபட்சம் அந்த இயக்குனரின் கையில் ஒரு 5 லட்சத்தை கொடுத்து குறும்படம் எடுத்து வரச் சொல்லி அந்த இயக்குனர் வொர்த்தா இல்லையா என்று பார்த்திருக்கலாம்.

ஒரு உதவி இயக்குனர் கதை சொல்லும்போதே அது உப்மாவா இல்லையா என்பதை நாம் கண்டுபிடித்துவிடலாம். புதிதாக படம் தயாரிக்க வருபவர்கள் இயக்குனர்கள் கதை சொல்லும் திறமையை பார்த்து மிரண்டுப்போய் விடுவார்கள். அந்த கதை சொல்லும் திறனை பார்த்து புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் ஏமாந்துப்போகிறார்கள்” என்று அந்தணன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்