- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் - ரிலீஸ் தேதியை அறிவித்த...

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் – ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

- Advertisement -

நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமான படம் கோமாளி. நடிகர் ஜெயம் ரவி நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவரே கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்த படம் லவ் டுடே. இந்த படம் மாபெரும் பிளாக் பஸ்டர் படமாக இருந்தது. ரூ. 100 கோடிக்கு மேல் பாக் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது.

லவ் டுடே படத்தில் இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இளம் காதலர்கள் மத்தியில் செல்போன் ஏற்படுத்தும் விளைவுகளை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படத்தை மிக அற்புதமாக பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார்.

- Advertisement -

இதையடுத்து ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய படம்தான் எல்ஐகே. முதலில் எல்ஐசி ( லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்று இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டது. எல்ஐசி என்பது ஆயுள் காப்பீட்டு கழகம் என்று பொதுத்துறை நிறுவனத்தின் பெயரை குறிப்பிடுவதாக எழுந்த சர்ச்சையால் பிறகு எல்ஐகே என டைட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

- Advertisement -

லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார்தான் எல்ஐகே படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்த வருகின்றன. விரைவில் பிரமோ பணிகளும் துவங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.

இதற்கிடையே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டுயூட் என்ற படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் எல்ஐகே படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஒரே நாளில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 2 படங்களுமே ரிலீஸ் ஆவது சாத்தியமில்லை. அதனால் வருகிற செப்டம்பர் 18ம் தேதி எல்ஐகே படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் முடிவு எடுத்து அறிவித்துள்ளார். தீபாவளிக்கு பண்டிகைக்கு முன்பே வருகிற செப்டம்பர் 18ம் தேதி எல்ஐகே படம் ரிலீஸாகிறது.

- Advertisement -

சற்று முன்