தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் சுதாகருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது சீனியர் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.
ஒரு கட்டத்தில் நடிகர் சரத்குமாரை காதலித்து 3வது திருமணம் செய்து கொண்டார். ராதிகா சினிமா நடிகையாக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருக்கிறார். முதல் மரியாதை படத்தில் ராதாவுக்கு பின்னணி குரல் பேசியிருந்தார். ராதிகா சரத்குமார், சின்னத்திரையில் பல சீரியல்களை தயாரித்துள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த சித்தி, டிவி சீரியல் வரலாற்றில் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை ராதிகா, கேரளாவில் நடந்த மலையாள படத்தின் சூட்டிங் ஒன்றில், கேரனுக்குள் கேமரா வைத்து அங்கு நடிகைகள் உடைமாற்றுவதை சிலர் மொபைல் போன்களில் பார்த்து ரசித்ததாக ஒரு சம்பவத்தை கூறினார். இது பயங்கர வைரலானது. இதுகுறித்து கேரளாவில் பாலியல் குற்றங்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு, நடிகை ராதிகாவிடமும் போனில் இது குறித்து விசாரித்தது என்ற தகவலும் வெளியானது.
நடிகை ராதிகா சமீபத்தில் பேசிய ஒரு நேர்காணலில், நடிகர் கமல்ஹாசன் படங்கள் என்றாலே பொதுவாக அதில் முத்தக் காட்சிகள் இருக்கும். இளைஞர்களை கவர்வதற்காக இதுபோன்ற காட்சிகளை படங்களில் வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் கமலின் படங்களில் முத்தக்காட்சி இருந்தது ஒரு விதியாகவே இருந்தது.
அப்படிப்பட் முத்த காட்சிகளில் சில நடிகைகள் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் நடிக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்த காட்சிகளுக்கு பயந்து கொண்டு தமிழின் படங்களில் நடிப்பதில்லை. அவர் படங்களில் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுப்பார். ஆனால் நான் அதை தடுத்தேன். அப்போது என்னை சிலர் எதிர்த்தார்கள். அதற்கு பிறகு எனக்கு பல படங்களில் வாய்ப்புகள் நழுவிப் போனது, என்று கூறியிருக்கிறார். சீனியர் நடிகை ராதிகா இப்படி கூறியிருப்பது பயங்கர வைரலாகி வருகிறது.
தனது படங்களில் நடிகைகளை கட்டாயப்படுத்திதான் முத்தக் காட்சிகளில் கமல் நடிக்க வைக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. புன்னகை மன்னன் படத்தில் நடித்த போது, நடிகை ரேகா தனக்கு தெரிவிக்காமல் தனது அனுமதியின்றி கமல் உதட்டில் முத்தமிட்டதாக கூறியிருந்தார். இப்போது ராதிகாவும் இப்படி கூறியிருப்பது விவகாரமாக மாறியுள்ளது. நடிகர் கமலுடன் பேர் சொல்லும் பிள்ளை, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் நடிகை ராதிகா நடித்திருந்தார். இதில் சிப்பிக்குள் முத்து படத்தில் பல காட்சிகளில் கமலுடன் ராதிகா மிக நெருக்கமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





