புத்தம் புது பயணம் என்ற படம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கேஎஸ் ரவிக்குமார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மொட்டையடித்துக்கொண்டு நடித்திருந்தார். அதன்பிறகு நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார் நடித்த சேரன் பாண்டியன் படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து நாட்டாமை நட்புக்காக பாட்டாளி சமுத்திரம் என பல ஹிட் படங்களை கொடுத்த கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் நடித்த முத்து படையப்பா லிங்கா உள்ளிட்ட படங்களை இயக்கினார். கேஎஸ் ரவிக்குமாரை பொருத்த வரை கமர்ஷியல் ஹிட் டைரக்டராக இருந்ததால் அவரது படங்களில் நடிக்க கமல் ரஜினி விஜய் போன்றவர்கள் தானாகவே முன்வந்தனர்.
கடந்த 2014ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் சோனாக்ஷி சின்ஹா அனுஷ்கா ராதாரவி சந்தானம் ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்த படம் லிங்கா. இதில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒருவர் திருடன் கேரக்டரிலும், ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாகவும் ரஜினி இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியான போது கடும் விமர்சனத்தில் சிக்கியது. படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை என்றும் தகவல் பரவியது. குறிப்பாக அனுஷ்காவுடன் ரஜினிகாந்த் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துவிட்டதாக கூறப்பட்டது. குசேலன் கோச்சடையான் வரிசையில் லிங்கா படமும் தோல்வி என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் லிங்கா படம் குறித்து பேசியிருக்கிறார். சமீபகாலமாக படங்களை இயக்குவதை காட்டிலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் கேஎஸ் ரவிக்குமார் அதிகமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்கா படம் குறித்து இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறுகையில், லிங்கா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். இப்போதும் ரஜினிகாந்த், அவர் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் என்று லிங்கா படத்தை குறிப்பிட்டுச் சொல்வார். இந்த படம் அப்போது 180 கோடி ரூபாய் வசூலித்தது என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். 2014ம் ஆண்டிலேயே அவ்வளவு பெரிய வசூலை லிங்கா செய்ததா என ரஜினி ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.





