- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் அடுத்த படத்தையும் இயக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்... சூட்டிங்கிற்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்......

ரஜினியின் அடுத்த படத்தையும் இயக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்… சூட்டிங்கிற்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்… ஏதே, சூப்பர் ஸ்டாரும் எல்.சி.யு-வில் வருகிறரா?…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விட, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சனுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர், திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலமாக, வசூலிலும் புதிய சாதனையை நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் அளவுக்கு ஜெயிலர் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு மட்டும் இன்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெயிலர் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. படத்தின் மிகப்பெரிய வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உயர் ரக சொகுசு காரை பரிசாக அளித்தது.

- Advertisement -

இதே போல் இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் படத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும், இரண்டு கிராம் தங்க காயினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. இந்த படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனும், வில்லனாக பகத் பாசிலும் நடிக்க உள்ளனர். இதுபோக மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா ஆகியோரும் படத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வரும் வாரங்களில் சென்னையில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் நடுவே, லால் சலாம் திரைப்படத்தின் பணிகளையும் ரஜினி முடித்திருக்கிறார். அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் இந்த திரைப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே, ஞானவேல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், படம் ரிலீஸ் ஆன பிறகு ரஜினிக்கான வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சூட்டிங்கையும் அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்கவும், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் லோகேஷ் திட்டமிட்டு இருக்கிறாராம். மேலும், எல் சி யு வுக்குள் ரஜினியை கொண்டு வரவும் இயக்குனர் திட்டமிட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவதால், இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்