- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர் கே சுரேஷ் பட போஸ்டரில் யுவன் சங்கர் ராஜாவின் பெயர்... அப்படி ஒன்னு நடக்கவே...

ஆர் கே சுரேஷ் பட போஸ்டரில் யுவன் சங்கர் ராஜாவின் பெயர்… அப்படி ஒன்னு நடக்கவே இல்ல என அடித்து கூறும் இசையமைப்பாளர்… பதிலுக்கு ஆர் கே சுரேஷ் கூறியது என்ன?

- Advertisement -

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே சுரேஷ். அந்தப் படத்தில் இடம் பெற்ற மக்க கலங்குதப்பா பாடலுக்கும் ஆர் கே சுரேஷ் வந்து போவார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு ஆர் கே சுரேஷ் படங்களின் நடிக்கவும் செய்தார். பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார் ஆர்கே சுரேஷ். இதனைத் தொடர்ந்து மருது திரைப்படத்திலும் வில்லனாக அவர் நடித்தார்.

- Advertisement -

அதில் அவரது ரோலக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் பேசப்படும் வகையில் அமைந்தது. தெனாவெட்டாக அவர் பேசும் டயலாக்குகள் இணையத்தில் ரீச் ஆகின. இதனைத் தொடர்ந்து ஒரே மாதிரியான வில்லன் கெட்டப்புகளிலேயே அவர் நடித்து வருகிறார்.

அதனால் இணையத்தில் சில சமயம் ட்ரோல் மெட்டீரியலாகவும் அவர் மாறினார். குறிப்பாக விரும்பன் திரைப்படத்தில் அவர் முறுக்கு மீசை உடன் வந்த காட்சிகளை ரசிகர்கள் கலைத்து தள்ளினர். நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் ஆர் கே சுரேஷ், சமீபத்தில் ஆருத்ரா கோல்டு மோசடியில் சிக்கினார்.

- Advertisement -

இதன் காரணமாக சில மாதங்கள் வெளிநாட்டில் இருந்த அவர் தற்போது சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். அது தொடர்பான வழக்கையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். இப்படியான சூழலில் ஆர் கே சுரேஷ் நடிப்பில் தென் மாவட்டம் என்னும் திரைப்படம் வெளியாவதாக போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் இசை யுவன் சங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதனை யுவன் சங்கர் ராஜா திட்டமிட்டமாக மறுத்துள்ளார். தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தென் மாவட்டம் திரைப்படத்திற்காக தான் கமிட்டாகவில்லை என்றும், இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த மறுப்புக்கு ஆர் கே சுரேஷ் பதில் அளித்துள்ளார். அதில் சார் நீங்கள் இந்த திரைப்படத்திற்கு கையெழுத்து போட்டுள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார். தயவுசெய்து ஒப்பந்தத்தை ஒரு முறை சோதித்துப் பாருங்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இணையத்தில் இப்படி இருவரும் மாறி மாறி கூறி வருவது, தற்போது பேசு பொருளாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்