- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... லோகேஷ் கனகராஜ் அந்த உச்ச நட்சத்திரத்துடன் இணையும் திரைப்படம் ரத்தாகிவிட்டதா... கலக்கத்தில் இயக்குனரின் ரசிகர்கள்...

ஏதே… லோகேஷ் கனகராஜ் அந்த உச்ச நட்சத்திரத்துடன் இணையும் திரைப்படம் ரத்தாகிவிட்டதா… கலக்கத்தில் இயக்குனரின் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா லெவலில் மார்க்கெட்டில் உச்சம் தொட்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் எனும் அருமையான திரைப்படத்தை கொடுத்து, இயக்குனராக அறிமுகமான அவர் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை இறக்கினார். சொல்லப்போனால் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது திரைப்படமான கைதி, வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டு பாராட்டை பெற்றது.

இவரைத் தொடர்ந்து மூத்த நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் ஆகியோருடன் இணைந்து விட்டார் லோகேஷ் கனகராஜ். இதன் மூலம் அவரது மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்து விட்டது. இதில் விஜயை வைத்து அவர் மாஸ்டர் லியோ என இரண்டு திரைப்படங்களை இயக்கினார். இந்த இரண்டுமே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு குறையையும் வைக்கவில்லை.

- Advertisement -

இதேபோல் அவர் கமல்ஹாசனை வைத்து எடுத்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எல் சி யு என்ற கான்செப்ட்டை புகுத்தி, அதில் தனது முந்தைய திரைப்படமான கைதியின் கதாபாத்திரங்களை கொண்டு வந்து, கிளைமாக்ஸில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யாவை வரவைத்து அட்டகாசப்படுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் அவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே கூலி தான் விமர்சன ரீதியாகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானது. இருப்பினும் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடி ரூபாய்க்கு மேல் பார்த்து விட்டதாக சொல்கிறார்கள்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் எடுப்பார் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில், திடீரென கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணியில் இறங்கிவிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அவர் நடிக்க இருக்கும் சூழலில், அந்தப் பணிகளை முடித்துவிட்டு அவர் இதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க பாலிவுட் நடிகர் அமீர்கான் உடன், லோகேஷ் கனகராஜ் சேர இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் அமீர்கான் வந்தார். அப்போது இருவரும் இணைவது குறித்து பேசியதாக கூறப்பட்டது. இது பற்றி அமீர் கானும் லோகேஷ் கனகராஜும் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் திடீரென அந்த திட்டம் கைவிடப்பட்டதாக பேசுகிறார்கள். இருப்பினும் அதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்