- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷாலால் லியோ படத்தில் நடந்த முக்கிய மாற்றம்.. ச்ச இப்படி ஆகிப்போச்சே.. லோகேஷ் கில்லாடிதான்

விஷாலால் லியோ படத்தில் நடந்த முக்கிய மாற்றம்.. ச்ச இப்படி ஆகிப்போச்சே.. லோகேஷ் கில்லாடிதான்

- Advertisement -

விக்ரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விஜய்க்கு ரொம்பவே அப்செட்டை கொடுத்திருக்கிறது. எனவே அந்த அப்செட்டுக்கான மருந்தை லியோ மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் தளபதி விஜய்யும், அவரது ரசிகர்களும்.

காஷ்மீரில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி திருப்பதியில் முடிவடைந்தது. கொஞ்சம் இருந்த பேட்ச் ஒர்க்கையும் காஷ்மீர் சென்று முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். எனவே படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன. தளபதி 68 சம்பந்தமாக அமெரிக்காவில் இப்போது இருக்கும் விஜய் விரைவில் இந்தியா திரும்பி லியோ படத்துக்காக டப்பிங் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா முதலில் திருச்சி, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நடக்கலாம் என கூறப்பட்டது. பிறகு மலேசியாவில் நடத்த திட்டம் என தகவல் வெளியானது. ஆனால் கடைசியாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே நடத்தலாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் உலாவுகிறது. செப்டம்பர் 30ஆம் தேதி விழா நடக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.

படத்திலிருந்து இதுவரை இரண்டு க்ளிம்ப்ஸுகள் வெளியாகியிருக்கின்றன. சஞ்சய் தத் ஏற்றிருக்கும் ஆண்டனி தாஸ் கேரக்டர் தொடர்பான க்ளிம்ப்ஸும், அர்ஜுன் ஏற்றிருக்கும் ஹரோல்டு தாஸ் கேரக்டர் தொடர்பான க்ளிம்ப்ஸும் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றனர். எனவே விஜய்யின் பெயர் இதில் லியோ தாஸாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லியோ பற்றி புதிய தகவலை விஷால் பகிர்ந்திருக்கிறார். ஒரு பேட்டியில் பேசிய அவர், “விஜய் நடிக்கும் லியோ படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்குமாறு என்னிடம் லோகேஷ் கனகராஜ் கேட்டார். ஆனால் நான்கு மாதங்கள் மொத்தமாக கால்ஷீட் கேட்டார்கள். அந்த நேரத்தில் என்னால் அதை கொடுக்க முடியவில்லை. அதனால்தான் லியோவில் நடிக்க முடியவில்லை. அதற்காக லோகேஷ் கனகராஜிடம் மன்னிப்பும் கேட்டேன்” என்றார்.

இந்தச் சூழலில் லியோ படத்தின் ஒன்லைன் ஒரு கேங்ஸ்டர் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைதான் என தகவல்கள் வெளியாகின. படத்தில் அர்ஜுன் விஜய்க்கு அண்ணனாக நடித்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. எனவே விஷால் நடிக்க மறுத்ததால் அந்த தம்பி கேரக்டரைத்தான் அர்ஜுனுக்கு அண்ணன் கேரக்டராக லோகேஷ் கனகராஜ் மாற்றிவிட்டாரோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சற்று முன்