- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கரை அடுத்து ஓரம்கட்டப்பட்ட லோகேஷ் கனகராஜ்? தொடர்ந்து படங்கள் கைநழுவிப் போவது ஏன்? -...

இயக்குனர் ஷங்கரை அடுத்து ஓரம்கட்டப்பட்ட லோகேஷ் கனகராஜ்? தொடர்ந்து படங்கள் கைநழுவிப் போவது ஏன்? – அந்த சாதனைதான் காரணமோ…

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் பிரமாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்பட்டவர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் தந்த படங்களில் எண்ணிக்கை 15 மட்டுமே. ஆனால் இதில் 13 படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அவருக்கு பெருமை பெற்றுத் தந்தன. ஆனால் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்ஜர் படங்கள் பிளாப் ஆகிவிட்டன.

அதனால் இயக்குனர் ஷங்கர் இயக்க ஆசைப்படும் வேள்பாரி படம் எப்போது துவங்கும் என்பதே தெரியவில்லை. 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் இதுவரை முன்வரவில்லை. இதற்கிடையே இந்தியன் 3 படமும் இன்னும் முடிவடையாமல் பெண்டிங்கில் உள்ளது.

- Advertisement -

என்னதான் ஜாம்பவான் இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து ஹிட் கொடுத்து ரசிகர்களின் மனதில் நின்றால்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வரும். அப்படிதான் மாநகர் கைதி விக்ரம் படங்களை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவர் எடுத்தது எல்லாமே வன்முறை நிறைந்த மசாலா குப்பை படங்கள் என்பதே கசப்பான உண்மை.

இதற்கிடையே விஜய் நடித்த லியோ படமும் ரஜினிகாந்த் கூலி படமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடியை கொடுத்து விட்டது. லியோ படத்தில் இரட்டை பிறவி ஜாதகம் நரபலி போன்ற கான்செப்ட்களை பார்த்து ரசிகர்கள் இதென்னய்யா காமெடியா இருக்கு? என்று வாய்விட்டு சிரித்தனர். அதற்கு மேலாக கூலி படத்தில் எலக்ட்ரிக் சேர் வெட்டியான் வேலை எட்றா கொக்கி என ஏகப்பட்ட கோமாளித்தனங்களை கொண்டு வந்து ரசிகர்களை மண்டை காய வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் தியேட்டர் பக்கமே எட்டிப் பார்க்க முடியவில்லை. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் தியேட்டர்களுக்குள் அனுமதிக்கவில்லை. ரஜினி படம் என்றாலே அனைத்து தரப்பு ரசிகர்களும் வருவார்கள். அப்படி அவர்களை தியேட்டர்களுக்கு வரவிடாமல் படம் எடுத்து சாதனை படைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று தியேட்டர் ஓனர்களே விமர்சித்தனர்.

இந்த சூழலில் அமீர்கான் நடிக்க வேண்டிய ஒரு படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. அது இப்போது இல்லை என்றாகி விட்டது. கைதி 2 படமும் வேண்டாம் என்று கூறிவிட்டனர். ரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்கும் ஒரு வாய்ப்பும் லோகேஷ் கனகராஜூக்கு கை நழுவிப் போய் விட்டது. ரஜினி ரசிகர்களையே தியேட்டர் பக்கம் வரவிடாமல் தடுத்த சாதனைதான் தொடர்ந்து பட வாய்ப்புகளை இழக்க செய்கிறது என ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்