நடிகர் விஜய் இப்போது விஜய் 68 என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் வரும் 31ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த வெங்கட்பிரபு, விஜய் 68 அப்டேட் வெகுவிரைவில் என சூசகமாக தெரிவித்திருந்தார்.
விஜய் 68 படத்துக்கு கோட் என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தினங்களாக தகவல் பரவி வருகிறது. கோட் என்றால் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற வகையில், எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்ற பொருளில் இந்த படத்தில் விஜயை மையப்படுத்திய கதையாக இருக்கிறது என கூறப்படுகிறது.
இந்த படத்தை விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் இந்த படத்தை ஏப்ரல் 14ம் தேதியன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் இருந்தது. ஆனால் பான் இந்தியா படமாக உருவாக்கப்படுவதால் கூடுதல் கால அவகாசம் எடுத்து பெரிய அளவில் படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்தில், விஜய் நடித்த வாரிசு, அஜீத் நடித்த துணிவு என இரண்டு படங்களும் நேருக்கு நேராக மோதியது. இதில் இரண்டு படங்களுமே வசூலில் வாரி குவித்தது என்றாலும் தனித்தனியாக போதிய இடைவெளிகளில் படங்கள் வந்திருந்தால் இன்னும் கணிசமான வசூலை அள்ளியிருக்கலாமே என்பது விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையாக எழுந்தது.
இப்போது லோகேஷ் கனகராஜ் ரஜினி 171 படத்துக்கு தயாராகி வருகிறது. வரும் ஏப்ரலில் இந்த படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதைத்தொடர்ந்து கைதி 2, ரோலக்ஸ் படங்களை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இந்த படங்களுக்கு பிறகு லியோ 2 ம் பாகம் இயக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அதாவது விஜய் இப்போது நடித்துவரும் வெங்கட்பிரபு படத்தை முடித்துவிட்டு விஜய் 69 படத்தில் நடிப்பார். அடுத்து 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2027ல் விஜய் 70, விஜய் 71 படங்களில் நடிப்பார். அப்போது விஜய் 71வது படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ 2ம் பாகமாக இருக்கும் என்று தகவல் பரவி வருகிறது. இதை கேள்விபட்ட பலரும், இது உருட்டா, உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், 2028ல் விஜய் இவரது இயக்கத்தில் நடிப்பார் என்று இப்போதே சொல்வதெல்லாம், அவன் உருட்டுன உருட்டுல கந்தர்வ கோட்டையே ஆடிப்போச்சு என்பது போல இருப்பதாக, பலரும் கலாய்த்து வருகின்றனர்.





