சினிமாவில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தால் மட்டுமே, அந்த கலைஞர்களுக்கு தொடர்ந்து மரியாதையும் மதிப்பும் கிடைத்து வருகிறது. குசேலன் படத்தில் ரஜினி ஒரு காட்சியில் இதுபற்றி கூறும்போது, படம் நன்றாக இருந்தால் மட்டுமே அது என் படமாக இருந்தாலும் மக்கள் பார்க்க வருவார்கள். என் படமாகவே இருந்தாலும், நன்றாக இல்லை என்றால் யாரும் பார்த்து வர மாட்டார்கள் என்று பொதுவாக கூறுவார். அதுதான் நிதர்சன உண்மை.
நூறு ஹிட் படங்கள் கொடுத்தாலும், தொடர்ந்து பிளாப் படங்களை கொடுக்கும் பட்சத்தில் அந்த நடிகரின் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இது நடிகர்களுக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு, முன்னணி நடிகர் நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் என பலருக்கும் இது பொருந்தும்.
நடிகர் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று, கடந்த 14ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விசில் போடு பாடல் வெளியானது. இந்த பாடலை விஜய் ரசிகர்கள் மட்டுமே ஒரு தரப்பில் கொண்டாடி வந்தாலும், பொதுவான ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
குறிப்பாக பாடல் காட்சியும், பாடல் வரிகளும், இசையமைப்பும் மிக தரமற்றதாக, ரசிகர்களின் விருப்பத்தை நிறைவு செய்யாத, திருப்தி அளிக்காத மிக மோசமான ஒரு பாடலாகவே ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஒரு படம் குறித்து, பாடல் குறித்து விமர்சனம் என்றால் தியேட்டர்களுக்கு படம் வந்த பிறகு தான் அது ரசிகர்களுக்கு தெரிய வரும்.
ஆனால், சமூக வலைதளங்களில் பிரமோ என்ற பெயரிலும் அப்டேட் என்ற பெயரிலும் நடிகர்கள், படக்குழுவினர் தங்களது படங்கள், பாடல் காட்சிகள் சார்ந்த குறிப்பிட்ட விஷயங்களை அப்டேட் செய்து கொண்டே இருப்பதால் உடனுக்குடன் ரசிகர்களிடமிருந்து ரியாக்சன் கிடைத்து விடுகிறது. அந்த வகையில் விசில்போடு பாடலுக்கு இசையமைத்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை, ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தால் பாடல் வேற லெவலில் இருந்திருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர்கள், இயக்குனர்கள், நண்பர்கள் என பலரும் உள்ள நிலையில், தொடர்ந்து இந்த பாடல் குறித்த ரசிகர்களின் மோசமான விமர்சனங்களால் நொந்து போன யுவன் சங்கர் ராஜா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தே வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களின் டார்ச்சரால்தான் யுவன் சங்கர் ராஜா பொறுமை இழந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.





