- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமைதிப்படை ஷூட்டிங்கில் நேர்ந்த அவமானம், இவங்க மூஞ்சியை எத்தனை தடவை பார்க்கிறது? - ஓபனாக பேசிய...

அமைதிப்படை ஷூட்டிங்கில் நேர்ந்த அவமானம், இவங்க மூஞ்சியை எத்தனை தடவை பார்க்கிறது? – ஓபனாக பேசிய நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் நடித்த படங்களில் இதுவரை பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்ற படம் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான அமைதிப்படை. இதுவரை சத்யராஜ் நடித்த கேரக்டரில் இந்த படத்தில் வரும் அமாவாசை என்கிற நாகராஜ சோழன் எம்எல்ஏ என்ற கேரக்டர்தான் அவருக்கு இன்னும் பெரிய புகழை பெற்றுத் தந்தது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நடிகர்கள் மேடைக்கு வந்தால் ஈஸியாக கைதட்டல் வாங்கி விடலாம். நாங்க எல்லாம் கொள்கையை பத்தி பேச வேண்டாம். கோட்பாட்டை பத்தி பேச வேண்டாம். எதிர்கால திட்டங்கள் பத்தி பேச வேண்டாம். சும்மா மேடைக்கு வந்த என்னம்மா கண்ணு என்று சொன்னால் எனக்கே கை தட்டறீங்களே?

- Advertisement -

அப்புறம் என்ன இருந்தாலும் விஜய் நம்மை விட பெரிய டாப் ஸ்டாருங்க. நாம இத்தனூண்டு சம்பளம் வாங்குகிறோம். அவர் எங்கேயோ ஒரு பெரிய ரேஞ்சுல இருக்கிறார் இல்லையா? அப்புறம் அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் இல்லீங்களா? ஆனா இதுல என்ன விஷயம் என்றால் உங்களுக்கு சினிமா பத்தி முழுசா தெரியாது.

நாங்க ஒரு கிராமத்துல போய் ஒரு படம் 2 மாசம் எடுப்போம். முதல் நாள் இப்படி திமுதிமுன்னு கூட்டம் வரும். ஹாய் ஊய்ன்னு ஒரே சத்தமா இருக்கும். அடுத்த நாள் பார்த்தா இதுல பாதி ஆயிடும். அப்புறம் பார்த்தா கால்வாசி ஆயிடும். அதுக்கு அப்புறம் பார்த்தா 10 பேர் கூட இருக்க மாட்டாங்க. நீங்க டெய்லி போய் பாருங்க. இதுதான் நடக்கும்.

- Advertisement -

அமைதிப்படை ஷூட்டிங் பொள்ளாச்சியில் 2 மாசம் எடுத்தோம். நாங்க தங்கியிருக்கிற ஓட்டலில் இருந்து காருக்கே வர முடியாது. அடிச்சு பிடிச்சு வந்த அந்த நிலைமை மாறி காலையில் எந்திரிச்சு பொள்ளாச்சி சந்தையில் நானும் மணிவண்ணமும் போய் அங்க ஒரு கடை இருக்குது, காலங்கார்த்தாலே இட்லி நாட்டுக்கோழி குழம்புன்னு எல்லாம் நல்லா இருக்கும். அதை எல்லாம் வாங்கி சாப்பிட்டு டீ சாப்பிட்டுட்டு வர்ற மாதிரி நிலைமை மாறிடுச்சு.

அங்க பாரு சத்யராஜ், அங்க இருக்கிறார் பாரு என்று சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. மணிவண்ணன் சார் நல்லா இருக்கறீங்களா சார்ன்னு கேட்டுட்டு போறாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, அடப்போய்யா அந்த பக்கம் போனா சத்யராஜ் மணிவண்ணன் இவங்க எல்லாம் உட்கார்த்துட்டு இருப்பாங்க, இவங்க மூஞ்சியை எத்தனை வாட்டி பார்க்கிறது? என்று சொல்கிற மாதிரி ஆகிவிட்டது. இதுதான் சினிமா என்று நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்