தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக உச்சம் தொட்ட இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். ஒரே ஒரு நாளில் சிலரை சுற்றி நடக்கும் கதையாக அது எடுக்கப்பட்டது. ஆக்சன் காட்சிகளும், அதற்கு ஏற்றபடி வசனங்களும் இதில் அமைந்திருந்தன.
மாநகரம் திரைப்படம் ஒரே ஒரு நாளில் நகரும் கதை என்றால் கைதி திரைப்படம் ஒரே ஒரு இரவை மட்டும் சுற்றி நகரும் கதை. போதைப் பொருளை பறிமுதல் செய்து வைத்திருக்கும் காவல்துறை, அது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் காவல் நிலையத்தில் இருந்து போதைப் பொருட்களை கைப்பற்ற துடிக்கும் வில்லன் கும்பல், இவர்களுக்கு நடுவே சிக்கி இருக்கும் கைதி என மிக சுவாரஸ்யமாக அந்த திரைப்படத்தை லோகேஷ் எடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து விஜயுடன் இணைந்து அவர் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய திரைப்படங்களை எடுத்தார். விக்ரம் திரைப்படமும் லோகேஷ் கனகராஜ்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் தான் எல்சியூ என்னும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி, பலரது கவனத்தையும் தன் மீது விழச் செய்தார்.
இப்படியான சூழலில் தற்போது அவர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது எல்சியுக்குள் வராது என்று ஏற்கனவே அவர் தெளிவுபடுத்தி விட்டார். இதில் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். ஹிந்தி நடிகர் ஆமீர் கானும் கேமியோ ரோலில் வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் திரைப்படமாக ஃபைட் கிளப் உருவானது. உறியடி புகழ் விஜயகுமார் ஹீரோவாக நடித்திருந்த அந்த திரைப்படம், தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பென்ஸ் என்னும் திரைப்படத்தை அவர் தயாரித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இது எல் சி யு-க்குள் உண்டு என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக அவர், முழுக்க முழுக்க ரொமான்டிக் கலந்த காதல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ஃபைனலி என்னும் யூடியூப் சேனலில் பிரபலமான பாரத் தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் பைனல் யூடியூப் சேனலின் மற்றொரு பிரபலம், நிரஞ்சன் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





