தமிழ் சினிமாவில் நிறைய புதுமுக நடிகைகள் வந்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே நீண்டகாலம் நிலைத்திருக்கின்றனர். மற்றபடி பல நடிகைகள் சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போய் விடுகின்றனர். அதிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடிப்பவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.
அதே நேரத்தில் தமிழில் நடிக்கும் பல நடிகைகள், 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து நடிக்கின்றனர். துவக்கத்தில் ஹீரோயின்களாக களம் இறங்கும் அவர்கள் பல ஆண்டுகளுக்கு பின் ஹீரோவின் அக்கா, அண்ணி, அத்தை, மாமியார் என தங்களது வயதுக்கேற்ப கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
அதே நேரத்தில் நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ஹீரோயின்களாகவே தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர். இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.
கடந்த 1980 மற்றும் 1990களில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளாக வலம் வந்தவர்கள் குஷ்பு மற்றும் மீனா. இவர்கள் தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர்கள். அதுவும் அவர்களுடன் நான்கைந்து படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்தவர்கள்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஒரே படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது குஷ்பு மீனா உள்ளிட்ட 4 நடிகைகள் சேர்ந்து ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளனர். அது இப்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
கேரளம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். வீடு, உடைமைகள் உறவுகளை இழந்து பலர் தவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகைகள் மீனா, குஷ்பு, சுகாசினி மற்றும் ஆகிய 4 பேரும் சேர்ந்து கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, ஒரு கோடி ரூபாயை வயநாடு பாதிப்புக்கு நிவாரணமாக அளித்துள்ளனர்.






