- Advertisement -
Homeபொழுதுபோக்குலாக் அண்ட் லோடட்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தரமான லியோ அப்டேட்.. தரமான சம்பவம் காத்திருக்கு

லாக் அண்ட் லோடட்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தரமான லியோ அப்டேட்.. தரமான சம்பவம் காத்திருக்கு

- Advertisement -

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் இயக்கியிருக்கும் நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றனர். ஐந்தாவது படமாக விஜய்யை வைத்து லியோ படத்தை இய்க்கியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் லோகேஷின் ஹிட் லிஸ்ட்டில் இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க அது நடக்கவில்லை. அதேசமயம் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின.

அந்தவகையில் படத்தின் இரண்டாவது சிங்கிளைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர். அதேசமயம் மிகப்பெரிய எதிர்ப்பையும் சர்ச்சையையும்கூட ட்ரெய்லர் சந்தித்தது. விஜய் பேசிய கெட்ட வார்த்தையை தவிர்த்துவிட்டு பார்த்தால் கண்டிப்பாக படத்தின் ட்ரெய்லர் மேஜிக்கலாகவே இருப்பதாகவும் ஒருதரப்பு ரசிகர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கான சிறப்பு காட்சி அனுமதியும் கிடைத்திருக்கிறது. மேலும் படம் ஐமேக்ஸ் தியேட்டரிலும் வெளியாகிறது. இதனால் லியோ மிகப்பெரிய அனுபவத்தை கண்டிப்பாக தரும் என்றும் பட ரிலீஸ் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர் ரசிகர்கள். டிக்கெட் புக்கிங்கும் தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடங்கியிருக்கிறது. தொடங்கியதும் ரசிகர்கள் விறுவிறுப்பாக டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் படம் பற்றிய புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. அதன்படி அனிருத்தின் ஸ்டூடியோவில் அவரும் அனிருத்தும் கையை பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும் லாக் அண்ட் லோடட் என்று பின்னணியில் விஜய் ஃபோட்டோ இருக்கும்படி பகிர்ந்திருக்கிறார். அதாவது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக இதன் மூலம் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே இதேபோன்ற ஒரு ஃபோட்டோவை கமல் ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே ஸ்டைலில் ஃபாலோ செய்வதால் கண்டிப்பாக லியோ தரமான சம்பவம் செய்யும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

சற்று முன்