இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கூலி திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அமீர்கான் உடன் இணைகிறார். பாலிவுட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் லோகேஷ் கனகராஜ், அறிமுகமானது மாநகரம் என்னும் திரைப்படத்தில்தான். தனது முதல் திரைப்படத்திலேயே சிக்சர் விளாசிய அவர், அடுத்ததாக கார்த்தியுடன் இணைந்து கைதி என்னும் திரைப்படத்தை கொடுத்தார்.
இதுவும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் பெயரும் பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து, தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை கொடுத்து மகத்தான வெற்றியை பெற்றார் இயக்குனர். இந்த நிலையில் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது விக்ரம் திரைப்படம்.
தனது முந்தைய திரைப்படமான கைதியின் கதாபாத்திரங்களை இதற்குள் கொண்டு வந்து, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் பெயரில் மேஜிக் செய்திருந்தார் இயக்குனர். இது மிகப்பெரும் அளவுக்கு ரீச் ஆகி பலருக்கும் பிடித்துப் போனதால் எல் சி யு கான்செப்ட் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து லியோ திரைப்படத்திலும், எல் சி யுவை கொண்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், சூர்யா சார் உடன் படம் செய்வதற்காக நான் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய கல்லூரி பருவத்தில் ஆயுத எழுத்து மாயாவி பிதாமகன் என சூர்யா திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு டைம்லைன் கிடைக்கும்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவோம். இதே போல் அஜித்குமார் சார் உடனும் சரியான நேரத்தில் நான் இணைந்து பணியாற்றுவேன்.
விஜய் சார் இல்லாமல் எல் சி யு கான்செப்ட் முழுமை அடையாது. ஆனால் இனி அவர் வருவாரா என்று தெரியவில்லை. இதைப் பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். அவருடைய பார்வை எதை நோக்கி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இதனால் என்னுடைய திரைப்படம் குறித்து இங்கு பேசுவதற்கு சரியான நேரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.





