- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மீதான கேள்விகளை அந்தத் திரைப்படம் உடைக்கும்... அதில் எந்த துப்பாக்கியும் இருக்காது... ஆச்சரியமூட்டும் பதிலை...

என் மீதான கேள்விகளை அந்தத் திரைப்படம் உடைக்கும்… அதில் எந்த துப்பாக்கியும் இருக்காது… ஆச்சரியமூட்டும் பதிலை அளித்த லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறைவான திரைப்படங்களையே கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தனது முதல் திரைப்படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்தார். பிறகு அவர் இயக்கிய கைதி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

 

தொடர்ந்து விஜயுடன் இணைந்த அவர் மாஸ்டர் மற்றும் லியோ என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இதேபோல் கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தையும் விருந்தாக அளித்தார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக எல் சி யூ என்ற கான்செப்ட்டையும் அறிமுகப்படுத்தி உச்ச நட்சத்திரமாக அவர் வலம் வருகிறார்.

 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர், கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சோபின் சபீர், நாகர்ஜுனா, சத்யராஜ் உபேந்திரா ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நேர்காணலில் ரசிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் கலந்துரையாடினார். அப்போது அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இது குறித்து அவர் பேசியதாவது, நான் வித்தியாசமான பாணியில் படங்களை எடுப்பது குறித்தான கேள்வியை இரும்புக்கை மாயாவி திரைப்படம் உடைக்கும்.

 

இந்தக் கதை தான் எனது பலமே. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் கதையை நான் எழுதி விட்டேன். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கதைக்கான முன்னேற்ற பணிகளை செய்து வருகிறேன். இந்தக் கதையில் எந்த ஒரு துப்பாக்கியும் இருக்காது. காதல் மற்றும் பேண்டஸி தான் இந்த படத்தின் பலமே.

 

ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் விக்ரம் படத்தின் இறுதியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து முடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தை நான் பெரிய அளவில் காட்டி விட்டதால் அதை வைத்து தனியாக ஒரு படம் எடுக்க இருக்கிறேன். கூலி திரைப்படத்திற்கு பிறகு எல் சி யு வை மையமாக வைத்து ஒரு பெரிய படம் எடுக்க இருக்கிறேன். அதில் எல் சி யுவில் இருக்கும் அனைவரும் இருப்பார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னால் துப்பாக்கி ரத்தம் இல்லாமல் படங்களை எடுக்க முடியாது. ஏனென்றால் அந்தக் கதைகளுக்கு கமிட்டாகி விட்டேன் என்று பேசி இருக்கிறார்.

சற்று முன்