- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய தலைவலியா போச்சே? சீனியர் நடிகர்களால் அப்செட் ஆன இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - அவங்க...

பெரிய தலைவலியா போச்சே? சீனியர் நடிகர்களால் அப்செட் ஆன இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – அவங்க மாதிரியே இவரும் மாறிடுவாரோ?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் லியோ. விஜய் திரிஷா நடித்த இந்த படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியானது. தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரித்திருந்தார். வியாபார ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற லியோ, விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படப்பிடிப்பு 100 சதவீதம் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

கூலி படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அமீர்கான் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். மேலும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

பொதுவாக ஒரு படம் உருவாகி திரைக்கு வரும் வரை அதுபற்றிய சுவாரசியங்கள், குறிப்பாக படம் பற்றிய தகவல்கம் சஸ்பென்ஸ் ஆக இருந்தால்தான் தியேட்டரில் அதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஆச்சரியங்களும் உற்சாகமும் ஏற்படும். அது படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக அமையும். 20 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் படம் திரைக்கு வரும் வரை அந்த படம் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியவே தெரியாது.

ஆனால் இப்போதெல்லாம் பிரமோஷன் அப்டேட் என்ற பெயரில் அந்தந்த படங்களில் நடிப்பவர்களே படம் குறித்த சுவாரசியமான தகவல்களை கூறி விடுகின்றனர். உதாரணமாக இப்போது கூலி படத்தில் நடித்துள்ள சீனியர் நடிகர்கள் நாகர்ஜூனா அமீர்கான் போன்றவர்கள் மற்ற படங்களின் பிரமோ நிகழ்ச்சிகளில் கூலி படம் குறித்து பேசி அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

இது இயக்குனர் லோகேஷ் கனகராஜை அப்செட் செய்து வருகிறது. வயது, அனுபவம் காரணமாக சீனியர் நடிகர்களிடம் இதுபற்றி பேச முடியாமல் நிலையில் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தவித்து வருகிறார். ஆனால் ஷங்கர் மணிரத்னம் போன்றவர்கள், இதுகுறித்து ஸ்ட்ரிக்ட் ஆக முதலிலேயே நடிகர்களுக்கு கண்டிசன் போட்டு விடுவார்கள். ஆனால் நாகர்ஜூனா அமீர்கான் போன்றவர்களுக்கு அப்படி கண்டிஷன் போட முடியாதே, என லோகேஷ் புலம்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்