- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டு வாரங்களுக்குப் பிறகும் குறையாத கூட்டம்... ரசிகர்களோடு ரசிகராக சேர்ந்து கூலி படத்தை திரையரங்கில் பார்த்த...

இரண்டு வாரங்களுக்குப் பிறகும் குறையாத கூட்டம்… ரசிகர்களோடு ரசிகராக சேர்ந்து கூலி படத்தை திரையரங்கில் பார்த்த லோகேஷ் கனகராஜ்… சரி அது எந்த இடம்னு தெரியுமா…

- Advertisement -

மாநகரம் எனும் தரமான திரைப்படத்தை கொடுத்து பலரையும் வியக்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். அந்த ஒரு திரைப்படமே அவருக்கு பல்வேறு வாய்ப்புகளையும், தனி மதிப்பையும் எடுத்துக் கொடுத்தது. அங்கிருந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இதில் மாஸ்டர் திரைப்படம் மட்டும், இரண்டாம் பாதி சரியில்லை எனக் கூறி கலவையான விமர்சனத்தை பெற்றது.

தொடர்ந்து விஜயை வைத்து லியோ திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க, அதுவும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படியான சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து கூலி திரைப்படத்தை கொடுத்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

முதல் நாள் காட்சியைக் காண பலரும் விருப்பப்பட்டதால், கூலி திரைப்படத்தின் அன்றைய வசூல் மிக அதிக அளவில் உயர்ந்தது. முதல் நாளில் மட்டும் அந்த திரைப்படம் 151 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நாங்கள் என்னென்னலாமோ எதிர்பார்த்து வந்தோம் என்றும், அது சரியாக நடக்கவில்லை எனவும் ரசிகர்கள் இணையத்தில் கூறினர். குறிப்பாக படத்தில் நிறைய இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாகர்ஜுனா, அமீர்கான், சோபின் சாகிர், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதி வொர்க் அவுட் ஆகவில்லை என்பதே பலரின் கருத்தாக இருந்தது.

இருப்பினும் கூலி திரைப்படத்தின் வசூல் குறையவே இல்லை என்றுதான் கூற வேண்டும். நான்கு நாட்களில் மட்டும் அந்த திரைப்படம் 404 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை வார விடுமுறை நாட்களில் ரசிகர்கள் பெரும்பாலானோரின் வருகையோடு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இப்படியான சூழலில் விடுமுறை தினத்திற்கு தனது சொந்த மாவட்டமான கோவைக்கு சென்ற லோகேஷ் கனகராஜ், அங்குள்ள திரையரங்கில், கூலி திரைப்படத்தை கண்டு களித்தார். திரையரங்கில் அவர் நின்று கொண்டும், பிறகு ரசிகர்களோடு ரசிகராக இருக்கையில் அமர்ந்து கொண்டும் படத்தை பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சற்று முன்