- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அபுதாபி புறப்பட்டுச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜூக்கு போட்ட திடீர் கண்டிஷன்...

திடீரென அபுதாபி புறப்பட்டுச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜூக்கு போட்ட திடீர் கண்டிஷன் – தலைவர் அந்த விஷயத்துல கில்லாடியாச்சே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து முடித்து விட்டார். அதாவது தசெ ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்து வந்த வேட்டையன் படத்தில், அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டார். சின்ன சின்ன பேட்ச் ஒர்க் பணிகள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், அதையும் நடித்துக் கொடுத்து விட்டார்.

அதனால், அடுத்து தனது 171வது படம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் அவர் அடுத்து நடிக்க இருக்கிறார். அதற்கு முன்பாக ரஜினிகாந்த் தற்போது திடீரென அபுதாபி கிளம்பிச் சென்றிருக்கிறார். அவர் இந்த மாதம் கழித்து, அடுத்து ஜூன் மாதத்தில்தான் திரும்பி சென்னைக்கு வருவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஜூன் மாதம்தான், கூலி படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடிக்காமல், கிடப்பில் போட்டிருப்பது நீண்ட நாட்களுக்கு பிறகுதான் ரஜினியின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து படத்தை தயாரிக்கும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்தை அழைத்து பேசிய ரஜினி, என் சினிமா வாழ்வில் இப்படி என் படத்தை யாருமே கிடப்பில் போட்டதில்லை. உங்களது தயாரிப்பில் இது எனக்கு நேர்ந்த முதல் கசப்பான அனுபவம் என்று அப்செட்டாக பேசியிருக்கிறார்.

ஒரே நேரத்தில் விடாமுயற்சி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை தயாரித்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக, லைகா நிறுவனம் கூறிய நிலையில், அப்படி என்றால் கூலி படத்தை முடித்து விட்டு மீதி காட்சிகளை நடித்து தருகிறேன் என, ரஜினி கூறியதால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம், ரூ. 50 கோடி அமேசான் பிரைம் மூலம் முன்பணமாக வாங்கி, ரஜினி நடிக்க வேண்டிய வேட்டையன் போர்ஷனை 15 நாட்களில் எடுத்து முடித்துள்ளது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இப்போது வேட்டையன் படப்பிடிப்பை முடித்து விட்ட திருப்தியோடு, அடுத்து கூலி படத்துக்கு முன்பாக, ஓய்வுக்காக ரஜினி அபுதாபி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சில வாரங்கள் அங்கு தங்கி ஓய்வெடுத்த பிறகு, அடுத்த மாதம் சென்னை திரும்பும் ரஜினிகாந்த், கூலி படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார்.

அபுதாபி கிளம்பும் முன், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை அழைத்துப் பேசிய ரஜினிகாந்த், நான் சொல்லும் குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பை துவங்கி விடுங்கள், எந்த காரணத்துக்காகவும் அந்த நாள் மிஸ் ஆக கூடாது. அதன்பிறகு எப்போது வேண்டுமானாலும் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் சொல்கிற நாளில்தான் முதல் நாள் ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவாக கூறியிருக்கிறார். அது மிக நல்ல நாளாக ஜோசியர்கள், சாமியார்கள் யாரேனும் கூறியிருக்கலாம். ஏனெனில் அதிக ஆன்மிக நாட்டமுள்ள ரஜினி, அதனால்தான் இப்படி ஒரு உத்தரவை போட்டிருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்