- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தில் லோகேஷ் கனகராஜின் தரமான செய்கை ஒன்னு இருக்காம்... இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாரும்...

லியோ படத்தில் லோகேஷ் கனகராஜின் தரமான செய்கை ஒன்னு இருக்காம்… இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க போங்க…

- Advertisement -

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். போதைப் பொருள் கும்பலையும், மகனைக் கொன்ற தந்தையின் பழி வாங்கலையும் ஒருசேர காட்டி, காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கொடுத்து வெற்றி பெற்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதியின் மிரட்டலான வில்லத்தனமும், பகத் பாசிலின் யதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

பழைய விக்ரம் படம் மற்றும் கைதி திரைப்படத்தின் தொடர்பாக சில காட்சிகளை அமைத்தது, விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனுக்காக பிளாக் ஸ்குவாட் கமாண்டர் கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பழைய விக்ரம் படத்தில் இருந்து கமல்ஹாசன் இந்தப் பணியை ரகசியமாக தொடர்வது போல் ரசிகர்களுக்கு காட்டி கைத்தட்டல்களை பெற்றார்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் கைதி படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நரேனை, விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் குழுவில் ஒருவராக காண்பித்த அவர், கைதியில் சில காட்சிகளையும் விக்ரமில் காட்டியிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக கிளைமாக்ஸில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

கடைசி 10 நிமிடங்களில் கமல்ஹாசன், கார்த்தி பின்னணியை வில்லன்கள் எடுத்துக் கூறுவது போலவும், சூர்யா அவர்களுக்கு சவால் விடுவது போலவும் வசனங்களை அமைத்து எல் சி யு என்னும் லோகேஷ் சினிமா யுனிவர்சுக்குள் நம்மை அழைத்துச் சென்றார் இயக்குனர். லோகேஷ் கனகராஜின் இந்த புதுவிதமான ஐடியாவுக்கு, அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிய அவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

- Advertisement -

இந்த நிலையில், தற்போது விஜயுடன் லியோ படத்தை எடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், அதில் எல் சி யூ வை புகுத்தி இருப்பாரா இல்லையா என்பதை மட்டும்தான் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் பாடல், அடுத்தடுத்த கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு அப்டேட் கொடுத்தாலும், ரசிகர்களின் பார்வை எல் சி யு மேலையே உள்ளது. லோகேஷ் சினிமா யுனிவர்சுக்குள் விஜய் வரவேண்டும் என்ற ஒரே விருப்பம்தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது லியோவில் இருந்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது படத்தில் கமல்ஹாசன், விக்ரமாக 10 முதல் 15 நிமிடங்கள் வருவாராம். இதில் விஜயுடன் அவர் சேர்ந்து நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரமில் அமர் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாஸில், லியோவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது கமல்ஹாசனும் சேர்ந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுதான் வெளியிட வேண்டும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்