லியோ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் தொடங்குகிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தனது முந்தைய திரைப்படம் போல் இருக்காது என்றும், ஒரு பயிற்சியின் சோதனையில் இந்த திரைப்படத்தை தான் இயக்க உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது எல்சியூ-வில் வராது என்றும் இயக்குனர் தெளிவுபடுத்தி விட்டார். இப்படியான சூழலில், அவர் நடிக்கவும் செய்துள்ளார். கமல்ஹாசனின் மகன் ஸ்ருதிஹாசன் இயக்கி இருக்கும் ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். இதற்கு இனிமேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதல் போஸ்டரில், ரிலேஷன்ஷிப் பற்றி கூறப்பட்டிருந்தது. அப்போது இது என்னவென்றே தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயினர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது.
அதில் இனிமேல் எனத் தொடங்கும் ஆல்பத்தை சுருதிஹாசன் இசையமைத்து இயக்கியிருப்பதாகவும், அதில் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு கமல்ஹாசன் இசையமைத்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில் இனிமேல் ஆல்பத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
18 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், சுருதிஹாசனும், லோகேஷ் கனகராஜம் நெருக்கமாக இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைப் பார்த்து காண்டாகி போன ரசிகர்கள், எப்பா இயக்குனரே உங்க படத்துல மட்டும் காதலர்களை கொலை பண்ணிக்கிட்டு, இப்போ ஸ்ருதிஹாசன் கூட ரொமான்ஸ் பண்றீங்களே என நகைப்புடன் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த ஆல்பம் வரும் 25ஆம் தேதி youtube தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





