- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் படத்திற்கு தொடர்ந்து நிலவும் சிக்கல்... விடாமுயற்சின்னு பெயர வச்சுக்கிட்டு படத்தை ரிலீஸ் செய்ய ஒரு...

அஜித் படத்திற்கு தொடர்ந்து நிலவும் சிக்கல்… விடாமுயற்சின்னு பெயர வச்சுக்கிட்டு படத்தை ரிலீஸ் செய்ய ஒரு முயற்சியும் பண்ண மாட்டாங்க போலயே… ரசிகர்கள் புலம்பல்…

- Advertisement -

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை ஆரம்பம் முதலில் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. முதலில் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. அதற்கு அஜித்தும் சம்பாதித்து விட்டார். லைக்கா நிறுவனமும் இதை அறிவித்து விட்டது. ஆனால் அதன்பிறகு என்ன பிரச்சனை ஏற்பட்டதோ தெரியவில்லை படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார்.

தயாரிப்பு நிறுவனத்துடன் அவருக்கு ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதன் பிறகு அஜித் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி பெரிதாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி டைட்டில் உடன் முழு அறிவிப்பையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

- Advertisement -

அதில் படத்திற்கு விடா முயற்சி என்றும், இதனை மகிழ் திருமேனி இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் அஜித் ரசிகர்களை புலம்ப விட்டது தயாரிப்பு நிறுவனம்.

இந்தப் பக்கம் அஜித்குமாரோ, எதுவுமே தெரியாதது போல தனது பைக்கை எடுத்துக் கொண்டு உலக சுற்றுலா செல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு அக்டோபரிலேயே இதன் சூட்டிங் தொடங்கியது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் படத்தை எடுக்க திட்டமிட்ட மகிழ் திருமேனி அதற்கான பணிகளில் இறங்கினார்.

- Advertisement -

ஆனால் அப்போதே படம் குறித்த எந்த ஒரு தகவலையும் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. அதில் திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலமாகவே தெரிய வந்தது. மேலும் அஜித்தின் உதவியாளரான சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்த காட்சியை வெளியிட்டார்.

இதன் பிறகும் மௌனம் காத்த தயாரிப்பு நிறுவனம், அஜித் பிறந்தநாளன்று எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது. இப்படியான சூழலில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி படத்தில் நடிக்க சென்று விட்டார் அஜித் குமார். இதனால் விடாமுயற்சி என்ன ஆனது என்றே எவருக்கும் தெரியவில்லை. படத்தில் என்னதான் பிரச்சனை என்றும் இதுவரை தகவல் வெளியாகாமல் இருந்தே வருகிறது. தீபாவளிக்கும் அந்த திரைப்படம் வெளியாக போவதில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் இதை எல்லாம் கூறினால் தானே தெரியும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து புலம்பிக்கொண்டே வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்