- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கப் போவது இவர் தானாம்... ஒரு வழியா பிக்ஸ் பண்ணிட்டாங்கப்பா...

விஜய்யின் மகன் இயக்கத்தில் நடிக்கப் போவது இவர் தானாம்… ஒரு வழியா பிக்ஸ் பண்ணிட்டாங்கப்பா…

- Advertisement -

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு வெற்றிக் கழகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோட் படத்தில் நடித்து வரும் அவர், அதற்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அத்துடன் திரையுலக பயணத்தை முடித்துக் கொண்டு முழுக்க முழுக்க அரசியல் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.

இப்படியான சூழலில் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகிறார் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நான் அடிச்சா பாடலுக்கு ஆட்டம் போட்டு இருப்பார் சஞ்சய்.

- Advertisement -

அப்போதிலிருந்தே தனது மகனை திரையுலகில் எதிர்காலத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த விஜய் திட்டமிட்டதாக தகவல் பரவ ஆரம்பித்தது. இதற்காக சமீபத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் விஜய் கதை கேட்டதாகவும், தனது மகனுக்கு ஏற்றவாறு ஒரு காதல் கதையை ரெடி செய்யுமாறு அவர் கூறியதாகவும் பேசப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாவது என உறுதியானது. ஆனால் அந்த சமயத்தில், திடீரென தனது இயக்குனர் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜேசன் சஞ்சய். இதற்காக கனடாவில் திரைக்கதை அமைக்கும் படிப்பையும் அவர் முடித்திருக்கிறார். தனது நண்பருடன் அங்கு குறும்படத்தையும் அவர் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இப்படியான சூழலில் தான், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சஞ்சயின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சஞ்சய் புதிய படத்தை இயக்க இருப்பதாகவும், இதனை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சஞ்சய்.

அவரது படத்திற்கு கவின் கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்த வரிசையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இணைந்திருக்கிறார். கிட்டத்தட்ட அவர் தான் இந்த படத்தின் நாயகன் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் இசையமைக்க உள்ளாராம். பிரீ ப்ரொடக்சன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் சூழலில் விரைவில் இதற்கான சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்