தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்தவர் வெங்கட்பிரபு. உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி போன்ற படங்களில் நடித்த வெங்கட்பிரபு பிறகு சென்னை 28 படம் மூலம் டைரக்டராக மாறினார். சென்னை ஏரியா பாய்ஸ் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான சென்னை 28 மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து சரோஜா கோவா ஆகிய ஜாலியான படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, நடிகர் சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து அவர் இயக்கிய சென்னை 28 படத்தின் 2ம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து சிம்பு நடித்த மாநாடு கார்த்தி நடித்த பிரியாணி உள்ளிட்ட படங்களும் வெங்கட்பிரபுவுக்கு வெற்றி படங்களாக இருந்தன. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். தி கோட் என அழைக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்போது இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் டிஸ்கஷனுக்காக இலங்கைக்கு சென்ற இயக்குனர் வெங்கட்பிரபு அங்கிருந்த ஒரு ரெட்ரோ பாரில் பல நாட்களாக உதவி இயக்குனர்களுடன் டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார்.
தன் நண்பர்களுடன் பார்ட்டி பண்ணுவதையே வழக்கமாக கொண்டுள்ள வெங்கட்பிரபு, இலங்கையிலும் டிஸ்கஷன் நாட்களில் அதையே தொடர்ந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த ரெட்ரோ பார் உரிமையாளரிடம் வெங்கட்பிரபு ஏதேச்சையாக பேசிக் கொண்டிருந்த போது, இந்த பாரை விலைக்கு வந்தால் விற்கும் ஐடியாவில் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
உடனே நானே வாங்கிக்கொள்கிறேன் என விலை பேசி முடித்த இயக்குனர் வெங்கட்பிரபு, தனது நெருங்கிய நண்பர் கலை இயக்குனர் ராஜூவேல் மூலம் அந்த ரெட்ரோ பாரை புதுப்பித்து சீரமைக்கும் பணியை தந்திருக்கிறார். அந்த பணி வேகமாக நடந்து வருகிறது. இனி வெங்கட்பிரபு இயக்கும் படம் என்றாலே இலங்கையில் உள்ள இந்த பாரில்தான் டிஸ்கஷன் நடக்கும். பார்ட்டி பண்ணுவதோடு படத்தின் டிஸ்கஷனையும் அங்குதான் வெங்கட்பிரபு நடத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் இலங்கையில் ஒரு நல்ல நம்பிக்கையான பார்ட்னர் இருந்தால், சென்னைக்கு வெங்கட்பிரபு வரும் நாட்களில் பாரை அவரது கண்காணிப்பில் விடலாம் என்ற முடிவிலும் நல்ல பார்ட்னரை அவர் தேடி வருகிறார்.





