- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் ரிலீஸ் ஆன ராசியோ என்னவோ, இன்னமும் எங்க பிரச்னை தீர்ந்தபாடில்லே, புலம்பி தீர்க்கும்...

லியோ படம் ரிலீஸ் ஆன ராசியோ என்னவோ, இன்னமும் எங்க பிரச்னை தீர்ந்தபாடில்லே, புலம்பி தீர்க்கும் தியேட்டர் உரிமையாளர்கள் – பொங்கல் வரை இதே நிலமைதானா?

- Advertisement -

தமிழகத்தில், கடந்த 10, 15 ஆண்டுகளில் பல ஊர்களில் சினிமா தியேட்டர்கள் பலவும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாக மாறியிருக்கின்றன. திருமண மண்டபங்களாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன. அதற்கு முக்கிய காரணம், சினிமா தியேட்டர்களில் இருந்த போதிய வருமானம் இல்லாததுதான். குறிப்பாக கொரோனா காலகட்டம் தியேட்டர் நிர்வாகிகளை முடக்கி போட்டு விட்டது.

செல்போன், இணையதளம் பயன்பாடு அதிகரிப்பு, ஓடிடி தளம், இணையதளங்களில் புதிய படங்கள் வெளியீடு போன்ற காரணங்களால் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை வெகுவாக குறைந்து போனது. மறுபக்கம் மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நவீன தொழில்நுட்ப வசதிகள் என ஏசி தியேட்டர்களை நாடுவோரும் அதிகரித்து விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விஜய்சேதுபதி என பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்து வந்தது. ஏனெனில் இந்த ஸ்டார்களின் படங்கள் என்றால், தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அதிகரிக்கும். டிக்கெட் கலெக்சன் அதிக லாபத்தை கொடுக்கும்.

தியேட்டர் நிர்வாகத்தின் இந்த வருமானத்துக்கும் சிக்கல் ஏற்படுத்தும் விதமாக, லியோ படம் ரிலீஸ் ஆன போது 75 – 25, 80 – 20 என்ற சதவீதத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பங்கு தரும் புதிய நிபந்தனையை கொண்டு வந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. இதனால் லியோ படம் பல நூறு கோடிகளை வசூலித்தும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கிடைத்தது சொற்பமான லாபம்தான்.

- Advertisement -

லியோவை தொடர்ந்து வெளியான படங்களில் ஜப்பான் மாபெரும் பிளாப் படமாக இருந்தது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே ஓரளவு ஓடியது. சமீபத்தில் வெளியான அன்னபூரணி, பார்க்கிங், நாடு படங்களுக்கு படம் வெளியான அன்றே சில காட்சிகளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் தியேட்டர்கள் எல்லாம் ரசிகர் கூட்டமின்றி காணப்படுகின்றன. முக்கிய தியேட்டர்கள் உள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இப்போது உள்ள சூழலில் பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் இப்போதைக்கு ரிலீஸ் ஆகவில்லை. ஜனவரி 14 பிறகுதான் லால் சலாம், அரண்மனை 4, கேப்டன் மில்லர் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதுவரை பெரிய படங்கள் எதுவும் வராத நிலையில், சினிமா தியேட்டர்களை பொருத்தவரை இதே நிலைதான் நீடிக்க போகிறது. லியோ படம் ரிலீஸ் செய்ததில் இருந்தே இப்படி வருமானம் இழப்பு தொடர்கிறது என்று தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பி தீர்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்