எப்போதுமே ஒரு தொழில் குறைந்த முதலீடு அதிக லாபம் என்பதே பெரிய வெற்றியாக இருக்க முடியும். 300 கோடி ரூபாய் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துவிட்டு அந்த படம் ரூ. 100 கோடி வசூல் ரூ. 200 கோடி வசூல் என்று பெருமையாக போஸ்டர் வெளியிட்டாலும் உண்மையில் அது வெற்றியல்ல.
அதே நேரத்தில் ஒரு படம் சுமார் 5 கோடி அல்லது 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி அந்த படம் ரூ. 20 கோடி அல்லது ரூ. 25 கோடி வரை வசூலை கடந்தாலே அது மிகப்பெரிய வெற்றிதான். அந்த வரிசையில் 2026ம் ஆண்டில் இதுவரை குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி பெரிய லாபம் கொடுத்த 5 படங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இதில் 5வது இடத்தில் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் உள்ளது. இதில் ஜீவா உடன் தம்பி ராமையா இளவரசு போன்றோர் இயல்பான காமெடி நடிப்பை தந்திருந்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 44 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. நடிகர் ஜீவாவுக்கும் இந்த படம் கம்பேக் கொடுத்தது.
அடுத்து 4வது இடத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த வித் லவ் படம். இது 4 கோடி ரூபாய் பட்ஜெட் உருவாகி 39 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அடுத்து 3வது இடத்தில் கென் கருணாஸ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த படம் யூத். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையும் பாடங்களும் பெரிய அளவில் கை கொடுத்தது.
பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான யூத் படம் ரூ. 4 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ. 71 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அடுத்து 2வது இடத்தில் நடிகர் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் படம் பெரிய வெற்றியை தந்தது. இது 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 72 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்த வரிசையில் முதலிடம் பெற்றது அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி படம்தான். இந்த படம்10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 81 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. யதார்த்தமான கிராமிய கதைக்களத்தில் உருவான குடும்பப்பாங்களான இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். அந்த வரிசையில் இந்த 5 படங்களும் லோ பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபம் குவித்த தமிழ் படங்களாக உள்ளன.





