- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 20ம் தேதி லப்பர் பந்து படம் ரிலீஸ்; படம் வெளியாகும் முன்பே ரூ. 1...

வரும் 20ம் தேதி லப்பர் பந்து படம் ரிலீஸ்; படம் வெளியாகும் முன்பே ரூ. 1 கோடி சம்பளம் பெற்ற இயக்குனர் – போட்றா வெடிய

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது நல்ல இயக்குனர்களை, நல்ல நடிகர்களை உடனடியாக ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களை கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். மிகப்பெரிய டைரக்டராக இருந்தாலும், சிறந்த நடிகர்களாக பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இப்போது வெளிவரும் அவரது படம் சிறப்பாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் வரவேற்று கொண்டாடுகிறார்கள்.

பெரிய இயக்குனர் பெரிய நடிகர் என்பதற்காக குப்பை படங்களை எந்த ரசிகர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதே நேரத்தில் புதுமுக நடிகர், புதுமுக இயக்குனர் உருவாக்கிய படமாக இருந்தாலும் அந்த படம் சிறந்த கதையாக, நல்ல திரைக்கதையாக சிறந்த கதைக்களமாக இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை கொண்டாடி வரவேற்று பெரிய வெற்றிப்படமாக மாற்றி விடுகின்றனர்.

- Advertisement -

அதற்கு உதாரணமாக குட் நைட் படத்தை சொல்லலாம். அதேபோல் சித்தா படத்தை சொல்லலாம். இப்படி குறிப்பிட்ட படங்களை சொல்ல முக்கிய காரணம் அந்த படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவதுதான். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

ஆனால் குரங்கு பொம்மை படத்தை இயக்கிய பிறகு, 7 ஆண்டுகள் காத்திருந்த டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் மகாராஜா படத்தை இயக்கி மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். விஜய் சேதுபதிக்கும் மகாராஜா படம் கம்பேக் படமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் அட்டக்கத்தி தினேஷ் குமார், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வரும் 20ம் தேதி லப்பர் பந்து என்ற படம் வெளியாகிறது. லப்பர் பந்து படம் குறித்து தமிழ் சினிமாத்துறையில் நல்ல ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்த படம் நிச்சயமாக நல்ல கதையம்சமுள்ள சிறந்த படமாக ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதனால் இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்துவை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம், இப்போது அடுத்த படத்தை இயக்க கமிட் செய்துள்ளது. இதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த படத்தை சிறப்பான ஒரு கதைக்களத்தில் உருவாக்கி தர வேண்டும் என்று கூறியுள்ளது. படத்தின் கதாநாயகனாக நீங்கள் விரும்பும் நடிகரை நடிக்க வைக்கலாம் என்றும் கூறியுள்ளது. அதனால் லப்பர் பந்து படம் வெளியாகுவதற்கு முன்பே பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கமிட்ட ஆகி 1 கோடி ரூபாய் சம்பளம் பெறுவது ரசிகர்களிடம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்