- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் சிஎம் ஆனா நீங்க இதை செய்ய சொல்வீங்களா? - இந்த கேள்விக்கு நடிகை...

நடிகர் விஜய் சிஎம் ஆனா நீங்க இதை செய்ய சொல்வீங்களா? – இந்த கேள்விக்கு நடிகை துஷாரா விஜயன் சொன்ன நச் பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு இளம் நடிகையாக துஷாரா விஜயன் வலம் வருகிறார். சார்பட்டா பரம்பரை கழுவேத்தி மூக்கன் ராயன் வேட்டையன் படங்களை தொடர்ந்து அவர் இப்போது சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் ஜோடியாக, வீரதீர சூரன் படத்தில் நடித்திருக்கிறார்.

ராயன் படத்தில் நடிகர் தனுஷின் தங்கையாக துஷாரா விஜயன் நடிப்பு ரசிக்ரகள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திலும் டீச்சர் கேரக்டரில் துஷாரா விஜயன் நடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. சார்பட்டா பரம்பரை கழுவேத்தி மூக்கன் படங்களிலும் அவர் அழுத்தமான நடிப்பை தந்திருந்தார்.

வருகிற 27ம் தேதி வீர தீர சூரன் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் நாயகன் விக்ரம், நாயகி துஷாரா விஜயன், இயக்குனர் அருண்குமார் உள்ளிட்டோர் பல நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர். இதில் படம் குறித்த முக்கிய விஷயங்களை அவர்கள் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இது படம் குறித்த ஆர்வத்தை ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை துஷாரா விஜயன் பங்கேற்றார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகர் விஜய் பெண்களுக்காக இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால் எந்த திட்டத்தை நீங்க பரிந்துரை செய்வீங்க என்று அந்த நேர்காணலில் நடிகை துஷாரா விஜயனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை துஷாரா விஜயன் கூறுகையில், அவர் அந்த இடத்தில் இருப்பதால் தானே அப்படி ஒரு கேள்வியை என்கிட்ட கேக்கறீங்க? அவர் எதை செய்தாலும் பெஸ்ட் ஆக தான் செய்வார். நான் சொல்லி அவருக்கு தெரியணும் என்று இல்லை.

அவருக்கு என்ன தோணுதோ அதை பண்ணட்டும். நம்ம அட்வைஸ் பண்ற அளவுக்கு எல்லாம் இல்லே. அந்த அந்த வேலையை பார்த்துட்டு அதை பத்தி பேசினா கரெக்டா இருக்கும். இதுல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லே, அவருக்கு தெரியும் என்ன பண்ண வேண்டும் என்று துஷாரா விஜயன் நெத்தியடியாக பதிலளித்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்