- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனையும் லப்பர் பந்து திரைப்படம்... கிரிக்கெட்டில் எமோஷனை கலந்து சிக்ஸர்...

சினிமா விமர்சகர்களின் பாராட்டு மழையில் நனையும் லப்பர் பந்து திரைப்படம்… கிரிக்கெட்டில் எமோஷனை கலந்து சிக்ஸர் அடித்த இயக்குனர்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. கடந்த காலங்களில் வெளியான குட் நைட், போர் தொழில், டாடா போன்ற திரைப்படங்கள் இளம் இயக்குனர்களின் திறமைகளை பறைசாற்றி ரசிகர்களிடையும் பாராட்டைப் பெற்றன.

 

- Advertisement -

இது போன்ற கதைகளை தேடித் தேடி நடிப்பதில் மணிகண்டன், ஹரிஷ் கல்யாண், கவின் போன்ற நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஹரிஷ் கல்யாண் தற்போது கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். ஆரம்பத்தில் சிந்து சமவெளி எனும் திரைப்படத்தின் மூலம் தான் அவர் அறிமுகம் ஆகி இருந்தார்.

 

- Advertisement -

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு எதுவுமே கை கொடுக்கவில்லை. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அதன் மூலம், பலரது இதயங்களிலும் குடியேறினார். பிறகு வெள்ளி திரைக்கு வந்த ஹரிஷ் கல்யாணத்துக்கு, சில படங்கள் வெற்றியை கொடுத்தன.

 

குறிப்பாக கடைசியாக அவருக்கு வெளியான பார்க்கிங் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. சாதாரண கதையை இருவரின் ஈகோவை வைத்து முன்னிலைப்படுத்தி அசத்தலாக திரைக்கதையை காட்டி இருந்தார் இயக்குனர். இப்படி பார்க்கிங் திரைப்படம் வேறு ஒரு தளத்தில் பார்க்கிங்காக, அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் வரும் இருபதாம் தேதி வெளியாகிறது.

 

இதன் பிரஸ் ஷோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. படம் பார்த்த அனைவருமே நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவதர்ஷினி, பால சரவணன் உள்பட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

கடலூர் பகுதியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழரசன் பச்சை முத்து என்னும் இளம் இயக்குனர் தான் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் கடைசி 20 நிமிடங்கள் சூப்பராக உள்ளது என்றும், கிரிக்கெட்டில் எமோஷனை கலக்கும் போது அது வெற்றி தான் என்றும் தெரிவித்து வருகிறார்கள். சொல்லப்போனால் சென்னை 600028 படத்திற்கு பிறகு, கிரிக்கெட்டுடன் சேர்ந்த ஒரு எமோஷன் காவியம் தான் லப்பர் பந்து என்று பலரும் கூறி வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்