- Advertisement -
Homeபொழுதுபோக்குடெஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் எஸ்வி சேகர், அவருடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்...

டெஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் எஸ்வி சேகர், அவருடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர் – இது உருட்டா… உண்மையான்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் எஸ்வி சேகர் 50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத கலைஞராக இருப்பவர். நாடகப்பிரியா என்ற நாடக்குழு மூலம் பல ஆயிரக்கணக்கான நாடகங்களை அரங்கேற்றம் செய்த சிறந்த நாடகக் கலைஞர். திரைப்பட நடிகராகவும் ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தவர்.

தனிமனிதராக அரசியல் கட்சி சார்ந்தவராக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் கருத்துகள் இருந்தாலும் ஒரு நாடக கலைஞராக சினிமா நடிகராக எஸ்வி சேகர் சிறந்தவர்தான் என்பதில் சந்தேகமில்லை. அவரது நாடகங்களை பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும். கடந்த 1980 90களில் எஸ்வி சேகர் நாடக கேசட்டுகள் விற்பனை அமோகமாக இருந்தது. அப்போது வீடுகள் தோறும் அவரது நாடக கேசட்டுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன.

- Advertisement -

பூவே பூச்சூட வா கதாநாயகன் மணல் கயிறு குடும்பம் ஒரு கதம்பம் வேடிக்கை என் வாடிக்கை சிகாமணி ரமாமணி சிம்லா ஸ்பெஷல் திருமதி ஒரு வெகுமதி சிதம்பர ரகசியம் வறுமையின் நிறம் சிவப்பு என பல படங்களை சொல்லலாம். காமெடி கதாநாயகன் மற்றும் முக்கிய கேரக்டர்களில் பல படங்களில் நடித்து வந்த எஸ்வி சேகர் கடந்த பல ஆண்டுகளாக ஜீன்ஸ் வல்லவன் போன்ற பல படங்களில் அப்பா கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாரா மாதவன் சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்த படம் டெஸ்ட். நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் செய்யப்பட்டு பிறகு நடிகர் எஸ்வி சேகர் வேண்டாம் என விலக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட நடிகர் எஸ்வி சேகர், என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு நானாக விலகினாலோ விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது என்று காட்டமாக கூறியிருந்தார். இப்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் எஸ்வி சேகர் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சித்தார்த் கூறியதாக, படக்குழு சார்ந்த சிலர் நடிகர் எஸ்வி சேகரிடம் கூறியிருக்கின்றனர். நீங்கள் மோடி ஆதரவாளர். அவர் பாஜக எதிர்ப்பாளர் என்பதுதான் காரணம் என்றும் கூறியிருக்கின்றனர். இதையறிந்த நடிகர் எஸ்வி சேகர், இந்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் எனக்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது உருட்டா, உண்மையா என்பது உறுதியாக தெரியவில்லை.

- Advertisement -

சற்று முன்