தமிழ் சினிமா விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் மேல் லாபம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது லப்பர் பந்து திரைப்படம். கடந்த மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை ஒவ்வொரு ஷோவும் நிரம்பிய படியே செல்கிறது.
எப்போதாவது ஒருமுறை தான் ரசிகர்கள் இந்த அளவிற்கு ஆறுதல் கொடுப்பார்கள். அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எந்த ஒரு கலவையான விமர்சனத்தை பெறாமல் குட் ரிவியூஸை பெற்றிருப்பதால் படத்தை பார்க்க பலரும் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.
இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தில், மாயாஜாலத்தை செய்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா உள்ளிட்டோரும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கு ஹிப் ஹாப் ஆதியை தான் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. ஆனால் அதற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தத் திட்டத்தை கைவிட்டு ஹரிஷ் கல்யாணிடம் சென்று இருக்கிறார் இயக்குனர்.
ஆனால் லப்பர் பந்து வெளியான அதே தினத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்த கடைசி உலகப் போர் படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று திரையரங்குகளை விட்டு வெளியேறியது. இதேபோல் அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியை நடிக்க வைக்க தான் இயக்குனர் முயற்சி செய்தாராம்.
ஆனால், அந்தத் திட்டம் கை கூடாமல் போய்விட்டதாம். பிறகு, எஸ் ஜே சூர்யாவையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார். அதுவும் நடைபெறாமல் போக இறுதியில் தான் ஆட்டத்திற்குள் வந்திருக்கிறார் அட்டகத்தி தினேஷ். இப்படி கதாபாத்திரங்களுக்கு பின்னணியிலேயே இவ்வளவு சுவாரசியங்கள் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் இருக்கிறது.





