- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் பிறந்தநாளன்று அவரது இத்தனை திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறதா... அப்படின்னா அந்த கில்லி ரெக்கார்டை...

அஜித் பிறந்தநாளன்று அவரது இத்தனை திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறதா… அப்படின்னா அந்த கில்லி ரெக்கார்டை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைங்கப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமாக அதுவும் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் குமார். மற்ற பெரிய நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு வாரம் ஈட்டும் வசூலை, அஜித்தின் திரைப்படங்கள் இரண்டே நாட்களில் பார்த்து விடும். இதற்கு மிக முக்கிய காரணம், அவருக்கென தனி இளைஞர் பட்டாளம் இருப்பது தான்.

 

- Advertisement -

இதன் காரணமாகத்தான் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் நடித்த திரைப்படங்கள் எதுவும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது இல்லை. விவேகம் நேர்கொண்ட பார்வை வலிமை என சுமாரான திரைப்படங்களை அஜித் கொடுத்தாலும், அது பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வசூல் செய்வதால் மோஸ்ட் வான்டெட் நடிகராக அஜித் இருக்கிறார்.

 

- Advertisement -

தற்போது அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் த்ரிஷா ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்படும் இதன் படப்பிடிப்பு, இன்னும் நிறைவடையவில்லை.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி படத்தில் நடிக்கிறார். இப்படி ஆன சூழலில், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் சமீப காலமாக திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட, அஜித்தின் திரைப்படங்கள் மட்டும் இதில் இடம் பெறாமல் இருந்தன. எப்படியாவது ஒரு படமாவது வந்தால் நன்றாக இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் வேலையில், தற்போது அசத்தலான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

வரும் மே ஒன்றாம் தேதி அஜித் தனது 53 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இப்படியான சூழலில், அவர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதலாவதாக 1998 ஆம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. முக்கிய நகரங்களின் ஒரு சில திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த வரிசையில் அஜித்தின் பில்லா படமும் இடம் பெற்றிருக்கிறது. ரஜினியின் பில்லா திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்து மிகவும் ஸ்டைலிஷ் ஆக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல், அஜித்தின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தாவும் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படி மூன்று படங்கள் வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்