- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படம் எந்த நிலையில் உள்ளது... முதல் முறையாக வாய் திறந்த தயாரிப்பு நிறுவனம்...

விடாமுயற்சி திரைப்படம் எந்த நிலையில் உள்ளது… முதல் முறையாக வாய் திறந்த தயாரிப்பு நிறுவனம்…

- Advertisement -

ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தின் சூட்டிங் நடக்கும் போதே, நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அஜித் 62 ஆக உருவாகும் இந்த திரைப்படத்தை, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் எடுப்பதாகவும், இதனை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைந்ததால் பலரது கவனமும் இயக்குனர் மீது திரும்ப, அவர் எந்த மாதிரியான திரைப்படங்களை இயக்குவார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். காமெடியுடன் கூடிய திரில்லர் ஸ்டோரியை அவர் எடுப்பதாக அப்போது பேசப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் கூடிக் கொண்டிருக்க, திடீரென்று படத்தில் இருந்து விலகினார் விக்னேஷ் சிவன்.

- Advertisement -

தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஜித்தை யார் இயக்கப் போகிறார் என்ற முழு கவனமும் லைகா நிறுவனம் மீது திரும்பியது. இந்தப் பட்டியலில் விஷ்ணுவர்தன், சுதா கொங்கரா உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர்கள் நீண்டு கொண்டே இருக்க, கடைசியாக வந்து சேர்ந்தார் மகிழ்திருமேனி.

கிரைம் திரில்லர் படங்களை எடுப்பதில் பெயர் போன இயக்குனர், தடையற தாக்க, தடம், மீகாமன் படங்களை இயக்கி பலரையும் கவர்ந்ததால் அஜித் மகிழ் திருமேனி கூட்டணிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர் ரசிகர்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மே ஒன்றாம் தேதி வெளியிட்ட படக்குழு விடாமுயற்சி என்ற டைட்டிலையும் அறிவித்தது.

- Advertisement -

ஆனால் இதன் பிறகு படத்திற்கான எந்த அப்டேட்களும் வெளியிடப்படாததால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகினர். ஏற்கனவே வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு நொந்து போன அவர்கள், இதில் வாயே திறக்காமல் நடப்பதை மட்டும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, படத்தில் ஆஜரானதோடு சரி அதன் பிறகு எங்கும் தலையை காட்டாமல் தல அஜித் பைக் டூர் கிளம்பியதால், விடா முயற்சி வீண் முயற்சி ஆகியதாகவே பலரும் கருதினர்.

இதற்கு ஏற்றார் போல், தயாரிப்பு நிறுவனமும் மாறப்போவதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், விடாமுயற்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கூறியிருக்கிறார். இது எங்களுக்கு ஒரு மதிப்பு மிக்க படம் என்றும் அவர் பேசியுள்ளார். இதனால் நிம்மதி அடைந்திருக்கும் அஜித் ரசிகர்கள், அனைத்து வதந்திகளுக்கும் தயாரிப்பு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்ததாக ஆனந்தம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்