- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்துல உங்க சங்காத்தமே வேணாம், வெங்கட் பிரபுவுக்கு நோ சொன்ன விஜய் - இந்த...

இந்த விஷயத்துல உங்க சங்காத்தமே வேணாம், வெங்கட் பிரபுவுக்கு நோ சொன்ன விஜய் – இந்த வேலை எல்லாம் விஜய் கிட்ட நடக்குமா?

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். அப்பா மகன் என்ற இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு சிநேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தை பொருத்த வரை ஆக்‌ஷன், குடும்பம், சென்டிமெண்ட், காமெடி உள்பட வெங்கட்பிரபு ஸ்டைலில் ஆன ஜாலியான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்பராயன் இந்த படத்தில் வெறித்தனமான சண்டை காட்சிகளை, அமைத்து எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இயக்குநர் வெங்கட்பிரபுவை பொருத்த வரை நண்பர்களுக்காக, நண்பர்களை வைத்து படம் எடுக்கிற ஒரு இயக்குநராக இருக்கிறார். 10 நண்பர்கள் ஒன்றாக இருந்தாலே, அதையே கதையாக்கி, படமாக்கி விடுபவர் என்ற பெயர் வெங்கட்பிரபுவுக்கு உண்டு. சென்னை 28, மங்காத்தா, சரோஜா, கோவா, மாநாடு போன்ற படங்களை பார்த்தாலே அது தெளிவாக புரிந்துவிடும்.

இப்போது தாய்லாந்து நாட்டில், விஜய் 68 ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிறந்த நாள்விழா, அங்கு வேற லெவலில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து, நடுக்கடலுக்கு சென்று இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், வெங்கட்பிரபுவின் நண்பர்கள் என பலரும் ஆடி, பாடி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த பிறந்த நாள் பார்ட்டியில், மிக பிரதானமாக சரக்கு பார்ட்டி நடந்திருக்கிறது. அங்கு இருந்த அனைவரும் ஏகப்பட்ட போதையில், மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆடிப்பாடி அந்த நாளை கழித்திருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்துக்காக, சென்னையில் இருந்து வெங்கட்பிரபுவின் நண்பர்கள் டீம், தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் சென்று விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விஜய் 68 படத்தின் நாயகன் விஜய், இந்த மதுபான விருந்தில் பங்கேற்காமல் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டார். தனது ஓட்டல் அறையில் அன்று தங்கி ஓய்வெடுத்தார். இயக்குநர் வெங்கட்பிரபு வற்புறுத்தி அழைத்தும், இல்லை, வர விருப்பமில்லை நேரடியாகவே சொல்லி விட்டார். தமிழகத்தின் நாளைய முதல்வர் என்ற லட்சியத்தில் இருக்கும் விஜய், இதுபோன்ற சரக்கு பார்ட்டியில் கலந்துகொண்டால், தனது இமேஜ் என்னவாகும் என்று யோசித்து, இந்த அழைப்பை நிராகரித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்