- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் தந்த அபார வெற்றி, மகிழ்ச்சியில் ரஜினியை நேரில் சந்தித்த லைகா புரடக்சன்ஸ்; திடீர்...

வேட்டையன் படம் தந்த அபார வெற்றி, மகிழ்ச்சியில் ரஜினியை நேரில் சந்தித்த லைகா புரடக்சன்ஸ்; திடீர் கோரிக்கை வைத்த லைகாவால் திக்குமுக்காடிய ரஜினி – ஓகே சொல்வாரா?

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீஸான படம் வேட்டையன். இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 220 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் 89 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது வேட்டையன் படத்துக்கு கலவையான விமர்சனங்களை கடந்தும் கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் 6 படங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில், வேட்டையன் படமும் 100 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 7 நாட்களில் 89 கோடி ரூபாயை கடந்த நிலையில், இன்னும் 11 கோடி ரூபாய் என்பதால் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த இலக்கை எட்டி விடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமீப காலமாக லைகா புரடக்சன்ஸ் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. குறிப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 பாகம் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 பாகம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படமும் லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து பெரிய நஷ்டத்தை கொடுத்தது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படமும் மிகப்பெரிய தோல்வி படமாக லைகா நிறுவனத்திற்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இப்படி தொடர்ந்து லைகா தயாரித்த படங்கள் தோல்வியடைந்த நிலையில், ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படமும் லைகா நிறுவனத்திற்கு பலத்த நஷ்டத்தை கொடுத்திருந்தது.

- Advertisement -

அதேபோல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை தயாரித்தது லைகா நிறுவனம்தான். அந்த படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து லைகா நிறுவனத்திற்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திற்கு, தற்போது வேட்டையன் படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. படம் வெளியான ஒரே வாரத்தில் 220 கோடி ரூபாய் வசூலித்திருப்பது, மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.

வேட்டையன் பட வெற்றிக்காக சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த லைகா புரடக்சன்ஸ் குழுவினர், வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது லைகா சார்பில் ஏற்கனவே லால் சலாம், தர்பார், 2.0 போன்ற படங்களை தயாரித்து பெரிய நஷ்டத்தை சந்தித்து இருக்கிறோம். அதனால் இன்னும் ஒரு படம் நீங்கள் லைகா தயாரிப்பில் நீங்கள் நடிக்க வேண்டும். அப்போது சம்பளத்தையும் குறைத்துக் கொண்டால், எங்களால் இந்த நஷ்டத்தில் இருந்து சற்று மீள முடியும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதுகுறித்து ரஜினி உடனடியாக எதுவும் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விரைவில் அவரிடம் இருந்து பதில் வருமா, என லைகா நிறுவனம் காத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்