- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவில் இப்படி ஒரு பாடல் இருக்கா என்று ஆச்சரியப்பட்ட தளபதி விஜய்... படப்பிடிப்பில் நிகழ்ந்த ஒரு...

லியோவில் இப்படி ஒரு பாடல் இருக்கா என்று ஆச்சரியப்பட்ட தளபதி விஜய்… படப்பிடிப்பில் நிகழ்ந்த ஒரு கலகல சம்பவம்…

- Advertisement -

தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி ஜூலையில் நிறைவுற்றது. காஷ்மீர் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் லியோவிற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்த திரைப்படத்தில் விஜய்யின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். அவரது மகனாக மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். இதுபோக சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி, மன்சூர் அலிகான் உட்பட ஏராளமான படத்தில் நடித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கௌதம் மேனனுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் எமோஷனல் கலந்த ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுவும் கடைசி 40 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இதுபோக லியோவில் கழுதைப்புலி வரும் காட்சி, கார் சேஸிங் காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளதாம். விஜயும் அர்ஜுனும் நேருக்கு நேர் மோதும் காட்சி வேறு லெவலில் இருக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள். மன்சூர் அலிகான் அறிமுகக் காட்சி வித்தியாசமானதாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் லியோ திரைப்படத்திலிருந்து தற்போது வரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நான் ரெடி தான் பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத்தின் தெறிக்கும் இசையில் உருவாகி இருந்த இந்த பாடல், விஜயின் குரலில் பாடப்பட்டது. இதனை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக செயல்படும் விஷ்ணு எடவன் எழுதி இருந்தார். ஆனால் பாடலில் சில வரிகள் மது மற்றும் புகைப்பிடிப்பதை தூக்கி வைத்திருப்பதாக கூறி தணிக்கை குழு அதனை கட் செய்ய சொல்லியது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள விஷ்ணு எடவன் கூறியதாவது, லோகேஷ் படத்தில் அன்பெனும் ஆயுதம் என்னும் மெலடி பாடல் இருப்பதை அறிந்து விஜய் ஆச்சரியப்பட்டார். அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பு, எடிட் டேபிளுக்கு வந்த விஜய் என்னை பாராட்டினார். என்னை கட்டிப்பிடித்து பாடல் வரிகள் அனைத்தும் நன்றாக இருப்பதாக கூறினார். Badass பாடல் அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு விஷ்ணு எடவன் கூறினார்.

- Advertisement -

சற்று முன்