- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி - பாண்டிராஜ் திரைப்படத்திலிருந்து வெளியான அந்த அறிவிப்பு... அதற்குள்ளேயுமா... என ஆச்சரியப்படும் தமிழ்...

விஜய் சேதுபதி – பாண்டிராஜ் திரைப்படத்திலிருந்து வெளியான அந்த அறிவிப்பு… அதற்குள்ளேயுமா… என ஆச்சரியப்படும் தமிழ் திரையுலகம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக கவனிக்கத்தக்க இயக்குனர்களில் முக்கியமானவர் பாண்டிராஜ். பசங்க திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரும் வெற்றி பெற்றது. அதோடு படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் பாண்டிராஜ்.

இதன் பிறகு அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்தன. வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா மெரினா என தொடர்ந்து சொல்லிக் கொள்ளும் வகையிலான திரைப்படங்களை அவர் எடுத்தார். பாண்டியராஜ் திரைப்படம் என்றால் அது என்டர்டைன்மெண்டுக்கு கேரண்டியாக இருக்கும் என்கிற வகையில் அவரது படங்கள் அமைந்தன.

- Advertisement -

இதில் பாண்டியராஜுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்க அவர்கள் அனைவருக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்து கைத்தட்டல்களை பெற்றிருந்தார் இயக்குனர்.

இத்தனை பேரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி அதை சக்சஸ்ஃபுல்லாக கொடுக்க முடியுமா என்று எண்ணி இருந்தவர்களுக்கு, பாண்டிராஜ் ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார். கடைக்குட்டி சிங்கம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை எந்த ஒரு குழப்பமும் சுணக்கமும் இல்லாமல் திரைக்கதை காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது.

- Advertisement -

பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அவர் எடுத்த நம்ம வீட்டுப் பிள்ளையும் ஹிட்டடித்தது. இறுதியாக சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இது கலவையான விமர்சனத்தையே பெற, தற்போது விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது.

இதுவும் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் படமாக எடுக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இதுபோக யோகி பாபு சரவணன் தீபா உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மற்றும் திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறுகிய காலத்திலேயே இதற்கான சூட்டிங் பணிகளை முடித்திருக்கிறார் பாண்டிராஜ். அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்