- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்களாக சக்கைப் போடு போட்டு வரும் மதகஜ ராஜா, படத்தோட மொத்த பட்ஜெட் சுந்தர்...

4 நாட்களாக சக்கைப் போடு போட்டு வரும் மதகஜ ராஜா, படத்தோட மொத்த பட்ஜெட் சுந்தர் சி, விஷால் சம்பளம் குறித்து வெளியான ஆச்சரிய தகவல்!

- Advertisement -

நடிகர் விஷால் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் பலத்த தோல்வியை சந்தித்தன. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றது. அதுவும் எஸ்ஜே சூர்யா நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

இந்த சூழலில் சூர்யா ஜெயம் ரவி வரிசையில் விஷாலும் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நிலையில் அவரை நிமிர்த்தி உட்கார வைத்த படமாக மதகஜ ராஜா படம் அமைந்து விட்டது. 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த படம் சக்கைப் போடு போட்டு வருகிறது.

- Advertisement -

குறிப்பாக சுந்தர் சி படங்கள் என்றாலே காதல் காமெடி கலந்த ஜாலியான படங்களாக இருக்கும். இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதை சந்தோஷமாக கழிக்க விரும்பினால் அதற்கு சுந்தர் சி இயக்கிய படம் கேரண்டி தருகிறது. அந்த வகையில் மதகஜ ராஜா பொங்கல் ரிலீஸில் வசூலில் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் அடுத்து ஹீரோக்களாக மாறி விடுகின்றனர். வடிவேலு சந்தானம் சூரி போன்றவர்கள் சிறந்த காமெடி நடிகர்களாக இருந்தனர். இப்போது அவர்கள் ஹீரோக்களாக நடிக்கின்றனர். யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள் என்ன கோணங்கித்தனம் செய்தாலும் ரசிகர்களால் அதை ரசிக்கவோ சிரிக்கவோ முடிவதில்லை.

- Advertisement -

இந்த சூழலில் வெளியான மதகஜ ராஜா படம் காமெடி ஜானரில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. பொங்கல் பண்டிகை நாட்களில் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் செல்பவர்கள், சிரித்து சிரித்து மகிழ்ந்து இந்த படத்தை ரசித்து வருவதால், 4 நாட்களில் ரூ. 15 கோடி வசூலை கடந்து படம் பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் மதகஜ ராஜா படத்தின் பட்ஜெட் மொத்தமே ரூ. 15 கோடிதான். இதில் இயக்குனர் சுந்தர் சி சம்பளம் ரூ. 2 கோடி, விஷால் சம்பளம் ரூ. 1 கோடி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படம் வெகு எளிதாக ரூ. 50 கோடியை அடுத்த ஒரு வாரத்தில் நெருங்கும் அளவுக்கு தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது.

- Advertisement -

சற்று முன்