- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவையில் நடந்த நிகழ்ச்சியில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் - என்னய்யா நடக்குது...

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் – என்னய்யா நடக்குது இங்கே…குழப்பத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

சமையல் கலையில் சிறந்து விளங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மக்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமா நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள் மற்றும் மிகப்பெரிய தொழிலதிபர்கள் இல்லங்களில் நடக்கும் திருமண விழாக்கள் உள்ளிட்ட விசேஷங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் என்பது பிரபலமாகி விட்டது. மாதம்பட்டி ரங்கராஜன் கேட்டரிங் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சமையல் கலைஞராக மட்டுமின்றி மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவிலும் நடிகராக இருந்து வருகிறார். மெஹந்தி சர்க்கஸ் பென்குவின் ஆகிய படங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் அவர் பங்கேற்று வருகிறார். இப்போது விஜய் டிவியில் நடந்து வரும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் 6வது சீசனிலும் நடுவராக மாதம்பட்டி தங்கராஜ் பங்கேற்றுள்ளார்.

- Advertisement -

கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜூக்கும் ஸ்ருதி என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்ருதி வக்கீலாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் நான் இப்போது 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆடை வடிவமைப்பாளான ஜாய் கிறிஸ்டிலா என்பவர் சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த புகைப்படங்களில் மாதம்பட்டி ரங்கராஜூம், ஜாய் கிறிஸ்டிலாவும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருந்ததும், ஜாய் கிறிஸ்டிலாவுக்கு ரங்கராஜ் நெற்றியில் பொட்டு வைப்பது போன்றும் புகைப்படங்களில் இருந்தன. இதனால் முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

- Advertisement -

இதனால் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி விரைவில் போலீசில் வழக்கு தொடர இருப்பதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனது 2வது திருமணம் குறித்து பரவிய தகவல் குறித்து எந்த ஒரு விளக்கமோ, பதிலோ மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இதுவும் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜாய் கிறிஸ்டிலா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் இந்த நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றதை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் உச்சத்தில் உள்ளனர். உண்மையில் நடந்தது என்ன என்பது புரியாமல் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்