- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா; கோலாகல ஏற்பாடுகள் தீவிரம் - போடு...

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா; கோலாகல ஏற்பாடுகள் தீவிரம் – போடு வெடிய, சீஃப் கெஸ்ட்டா கலந்துக்கப் போறது இந்த பிரமாண்ட ஹீரோக்களா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், 1996 ஆம் ஆண்டில் நடித்து வெளியான படம் இந்தியன். டைரக்டர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, கவுண்டமணி செந்தில், நெடுமுடி வேணு, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் லஞ்சம், ஊழல் பற்றி பேசிய முக்கிய படமாக அந்த காலகட்டத்தில் இருந்தது. சுதந்திர போராட்ட காலம் பற்றியும் பேசியது. பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்ட இந்த படம், மெகா ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் லஞ்சம் வாங்குபவர்களை, வர்மக்கலையால் செயல் இழக்க வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யும் கேரக்டரில் இந்தியன் தாத்தா கேரக்டரில் கமலஹாசன் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த படம், இந்தியன் 2ம் பாகமாக டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் பின்னணியில் மற்றொரு சுவாரசியமான சம்பவமாக, இந்தியன் 2 படம் எடுக்கும் போதே, இந்தியன் 3 படம் எடுப்பதற்கான கதையின் அந்தந்த காட்சிகளை தொடர்ச்சியாக உருவானது. இந்தியன் 2 எடுக்கும் போது இந்தியன் 3 படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார் டைரக்டர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2க்கு பிறகு, இந்தியன் 3 படம் வரும் 2025 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜூன் 13-ஆம் தேதி இந்தியன் 2 படம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக வரும் மே 16ஆம் தேதி இந்தியன் 2படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வராத பட்சத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் இருவரும் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். ஏனெனில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துக் கொண்டிருப்பதால், அவர் தனது தந்தை சிரஞ்சீவியுடன் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் வரும் மே 16ஆம் தேதி, நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன், டைரக்டர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிரூத் உள்பட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் ஒரு சிறப்பு அம்சமாக இந்தியன் தாத்தா வேடத்தில் கூட கமல்ஹாசன் கலந்துக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

சற்று முன்