- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்பானி தயவால் 12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸாகும் விஷால் படம் - புரட்சித் தளபதிக்கு கம்பேக்...

அம்பானி தயவால் 12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸாகும் விஷால் படம் – புரட்சித் தளபதிக்கு கம்பேக் கொடுக்குமா? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் சுந்தர் சி

- Advertisement -

நவரச நாயகன் கார்த்திக், ரம்பா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் உள்ளத்தை அள்ளித்தா. 1990களில் வெளியான இந்த படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து, இயக்குனரான சுந்தர் சி தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

காதல், கவர்ச்சி, காமெடி, குடும்பக்கதை என சில பார்மூலாக்களை வைத்து, ரசிகர்களை மகிழ்விக்கும்படியான படங்களை தொடர்ந்து தந்துக்கொண்டு இருப்பவர் சுந்தர் சி. இவரது படங்கள் மினிமம் கியாரண்டி தரமுடிகிற அளவுக்கு நிச்சயம் ரசிகர்களை கவரும் படமாக இருந்து விடுகிறது. இவர் இயக்கிய படங்களில் சில படங்களை தவிர, மற்ற படங்கள் வெற்றிப் படங்களாகவே இருந்திருக்கின்றன.

- Advertisement -

நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் வசூல் எட்டிய இந்த படத்தின் வெற்றியால், சந்தோஷத்தில் உள்ள சுந்தர் சி, அடுத்து அவரே நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவும் தயாராகி விட்டார். இந்த படத்தில் வடிவேலு மீண்டும் சுந்தர் சியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சிக்கு மற்றொரு சந்தோஷ நிகழ்வாக, 12 ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய படம் ஒன்று, வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்கு திரைக்கு வருகிறது. அதாவது 2011ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கிய படம் மதகஜ ராஜா. விஷால் நாயகனாக நடித்த இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜெமினி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஆனால் 12 ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி இருந்தது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் வெற்றிப் படமாக இருக்கும் என சுந்தர் சி பலமுறை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதியாகி விட்டது. ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் பலத்த நஷ்டம் காரணமாக, இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் இருந்து வந்தது. இந்நிலையில், ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சாலிக்கிராமத்தில் உள்ள பிக்பஜார் மார்க்கெட்டை அம்பானி விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். இதில் முதல்கட்டமாக ரூ. 200 கோடி வரை ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து 12 ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி கிடக்கும் மதகஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்ய ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதனால் சுந்தர் சி படங்கள் என்றாலே வெற்றி நிச்சயம் என்ற நிலையில், இந்த படம் விஷாலுக்கு கம்பேக் கொடுக்குமா, காமெடி நடிகராக இருந்த காலத்தில் சந்தானம் நடித்துள்ள காமெடி காட்சிகள் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்படுமா, என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்