மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது ஆறாவதாக கூலி திரைப்படத்தை அவர் இயக்கி முடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பணிகளில் தற்போது படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் இயக்கம் ஒரு பக்கம் இருக்க தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்காக அவர் ஜி ஸ்குவாட் என்னும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதிலிருந்து முதல் திரைப்படமாக வெளிவந்தது, பைட் கிளப்.
உரியடி விஜயகுமார் நாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது ஆனால் அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. படத்தில் மிகவும் தொய்வான அளவிலேயே திரைக்கதை இருந்ததால் பலரும் இதனை விமர்சித்தார்கள். இதனால் ஃபைட் கிளப் அந்த அளவுக்கு சண்டை போடவில்லை.
இப்படி லோகேஷ் கனகராஜ் தயாரித்த முதல் திரைப்படமே படுதோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில்தான் தனது தயாரிப்பில் அடுத்த திரைப்படம் ஆக பென்ஸ் உருவாக இருப்பதாக அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். முதலில் இந்த திரைப்படத்தை லோகேஷின் நண்பரான ரத்தினகுமார் இயக்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென பாக்யராஜ் கண்ணன் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
பாக்யராஜ் கண்ணன் ஏற்கனவே, சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ மற்றும் கார்த்தியை வைத்து சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் அவரது மூன்றாவது திரைப்படமாக இது அமைகிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இதில் கைகோர்த்து இருக்கிறார். இது எல் சி யு வுக்குள் வருவதாக, படம் ரெடியாவதற்கு முன்பாகவே அறிவித்தார் லோகேஷ் கனகராஜ்.
இதனால் பென்ஸ் திரைப்படத்தின் மீது பலருக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் பென்ஸ் திரைப்படத்திற்கான படபூஜை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து சூட்டிங் நடைபெற இருக்கும் நிலையில் படத்திலிருந்து ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ராகவா லாரன்ஸ் உடன் மாதவன் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்களாம். இதனால் மூன்று பேரும் தற்போது எல் சி யூ கான்செப்ட் க்குள் வந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.





